Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு! - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

சென்னை: பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2-ம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்த விலைக் குறைப்பு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து விலையை நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, பெட்ரோல் விலையில் ரூ.1-ம், டீசல் விலையில் ரூ.2-ம் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) அறிவித்து உள்ளது. இந்த புதிய விலை, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, சென்னையில், ஓரு லிட்டர் பெட்ரோல் விலை 59 ரூபாய் 65 காசுகளாக உள்ளது. டீசல் விலை, லிட்டர் ஒன்று 51 ரூபாய் 65 காசுளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதேபோல் தலைநகர் டெல்லியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.60.09 காசுகளுக்கும் (முந்தைய விலை ரூ.61.09), டீசல் விலை ரூ.50.27 காசுகளுக்கும் (முந்தைய விலை ரூ.52.27) விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, இதுவரை 4 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close