Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடன் தொகைக்கு வங்கி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்! - ரகுராம் ராஜன்

மும்பை: பெரிய அளவிலான தொகை கடனாக வழங்கப்படும்போது அதற்கு வங்கி அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தி உள்ளார்.

வங்கி அதிகாரிகள் அமைப்பின் ஆண்டுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பேசும்போது, ''வங்கிகளில் கடன் ஒதுக்கீட்டுக் குழுவின் வாயிலாக பெரிய தொகை கடனாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. அத்தகைய நடைமுறை இருந்தாலும், அந்தக் கடன்களை வழங்கும்போது வங்கி அதிகாரிகள் அவற்றுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

இதன் வாயிலாக கடனைத் திரும்ப வசூலிப்பது திறம்பட மேற்கொள்ளப்படும். அத்துடன், அந்த அதிகாரிகளுக்கு ஊக்கத் தொகை கிடைப்பதுடன், சிறந்த செயல்பாடுகளின் அடிப்படையில் பதவி உயர்வும் வந்து சேரும். பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மையில், மற்ற ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிக அளவிலான ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.

மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தற்போது இருக்கக்கூடிய பிரச்னைகளில் ஒன்று, கீழ் மட்ட அளவில் அதிக சம்பளமும், உயர்மட்ட அளவில் குறைவான சம்பளமும் வழங்கப்படுவது. எனக்குகூட சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாகவே நான் உணர்கிறேன்.

ரிசர்வ் வங்கியில் வழங்கப்படும் சம்பளத்தை பொறுத்தவரை, கிளாஸ் 3 பிரிவில் உள்ள பணியாளர்களுக்குகூட கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படுகிறது. அதனால்தான், கிளாஸ் 3 பிரிவில் கூட நாம் பல என்ஜினியர்களையும், எம்.பி.ஏ படித்தவர்களையும் காண்கிறோம்' என தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ