Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இது மிகவும் முக்கியமான நாள்!’ - ராணுவ வீரரின் இறப்பதற்கு முந்தைய உரை

ஜம்மு: சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். கமாண்டன்ட் பிரமோத் குமார், தேசிய கொடியை ஏற்றி வைத்து வீர உரையாற்றும்போது, 'இது மிகவும் முக்கியமான நாள் ஆகும்' என்று உருக்கமாக பேசிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் நேற்று முன்தினம் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். இதனை முன்னிட்டு 49வது பட்டாலியன் சி.ஆர்.பி.எப். கமாண்டன்ட் பிரமோத் குமார் (44) தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய உரையாற்றினார். அப்போது, ''இந்தியா 70வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.

பாதுகாப்பு படையினருக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் கல்வீச்சு போன்ற சம்பவங்களை நாம் திறமையாக சமாளிக்க வேண்டும்” என்றார். தனது உரையை முடிப்பதற்கு முன்பாக, தனது கை கடிகாரத்தை பார்த்த பிரமோத் குமார், 'இது மிகவும் முக்கியமான நாள் ஆகும்' என்றார்.

இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நவ்ஹட்டா சவுக், கோஜ்வாரா சவுக், பேட்டா காலி, கானியர் சவுக் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்துவதாக சி.ஆர்.பி.எப். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனே பிரமோத் குமார் தலைமையிலான வீரர்கள் வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து, எதிர் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தயாராகி உள்ளனர். பயங்கரவாதிகளுடன் கமாண்டன்ட் பிரமோத் குமார் சண்டையிட்டுள்ளார். அந்த துப்பாக்கி சண்டையின்போது, 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை எதிர்த்து சண்டையிட்டபோது, கமாண்டன்ட் பிரமோத் குமார் முதலில் சென்றதால் அவரது கழுத்தில் பயங்கரவாதிகளின் குண்டு பாய்ந்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், உடனடியாக அங்குள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பிரமோத் குமார் வீரமரணம் அடைந்தார். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பிரமோத் குமார், கடந்த 1998ம் ஆண்டு துணை ராணுவத்தில் இணைந்தார். 2014-ம் ஆண்டு அவர் ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்டார். சமீபத்தில்தான் பிரமோத் குமார் கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!  

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ