Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவை விஞ்சும் இந்தியா! எச்சரிக்கும் ரிப்போர்ட்! #AirPollution

                            

லகில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, இறக்கும் நபர்களில் பாதிப்பேர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்களே என சமீபத்தில் தெரியவந்துள்ளது. அதிலும், சீனாவை விடவும் இந்தியாவில் இந்த இறப்பு விகிதம் அதிகரித்து வருவதுதான் அதிர்ச்சி! காற்று மாசுபாடு அடைவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அனல்மின் நிலையங்களில், நிலக்கரி எரிக்கப்படுவது. ஆனால் இதுவரை இந்தியாவில் நிலக்கரி மூலம், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எந்தவித நடவடிக்கையும், அரசின் சார்பில் எடுக்கப்படவில்லை.


சீனாவின் ஹெல்த் எபெக்ட் இன்ஸ்டியூட் என்னும் நிறுவனத்தின் தலைவர் டான் க்ரீன்பௌம் இதுபற்றிக் கூறுகையில், "காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலை, சீனாவின் நிலையை விடவும் மோசமாகி வருகிறது. இதற்கு காரணம், இந்தியா காற்று மாசுபாட்டைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்காததே ஆகும். 2020-க்குள் சீனா, மின்னுற்பத்தி மூலம், வெளியேறும் மாசின் அளவை 60% அளவிற்கு குறைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இந்தியா, இந்த வருடம்தான் அனல்மின் நிலையங்களுக்கான, சுற்றுச்சூழல் தரநிர்ணயத்தையே வகுத்துள்ளது. நிலக்கரி மூலம், மின்சாரம் தயாரிப்பதைக் குறைக்க, இந்தியாவை விடவும், சீனா முனைப்புக் காட்டி வருகிறது" என்கிறார்.

                       
இரு நாடுகளுமே, மின் உற்பத்திக்காக பெரிதும் சார்ந்திருப்பதே நிலக்கரியை என்பதால், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. காற்று மாசுபாட்டிலும் இவற்றின் பங்கு அதிகமாக இருக்கிறது. 1990-ல் இருந்து 2013 வரையிலான காலகட்டத்தில் சீனாவின் நிலக்கரி பயன்பாடு மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதே சமயம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, நிலக்கரி மிகவும் சிக்கனமான, விலை குறைந்த வழி என்பதால் இந்தியாவும் இதனை கைவிடத் தயங்குகிறது. ஆனால் சிக்கனமான வழி, என்றாலும் ஆரோக்கியமான வழி இல்லை என்பதையே, இந்த ஆய்வுகள் உணர்த்துகின்றன.

-செ.ஜெ.பச்சமுத்து 

(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்