Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கியின் புது கவர்னாகிறார் உர்ஜித் பட்டேல்

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கட்டுள்ளார்.


தற்போதைய கவர்னாரான ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. உர்ஜித் பட்டேல், செப்டம்பர் 4-ம் தேதி முதல்  அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கவர்னராக பதவி வகிப்பார். 


ரிசர்வ் வங்கிக்கு இருக்கும் நான்கு துணை ஆளுநர்களுள் உர்ஜித் பட்டேலும் ஒருவர். 52 வயதான உர்ஜித் பட்டேலின் பதவிக்காலம், கடந்த ஜனவரி மாதம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.2013-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வரும் உர்ஜித் தான், அடுத்த கவர்னர் ஆவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் உர்ஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ