Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரைச் சீரழிக்க பாகிஸ்தான் விரும்புகிறது! - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

ஷாஜஹான்பூர்: காஷ்மீரைச் சீரழிக்கவும் அங்கு அமைதியைக் குலைக்கவும் பாகிஸ்தான் விரும்புகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டி உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ''ஒரு நாட்டில் பயங்கரவாதியாக இருப்பவர் மற்றொரு நாட்டுக்கு தியாகியாகவோ, கதாநாயகனாகவோ இருக்க முடியாது என்பதை நான் சமீபத்தில் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தபோது அங்கு தெரிவித்தேன்.

ஆங்கிலேயர்கள் கையாண்ட பிரித்தாளும் தந்திரத்தைப் பின்பற்றி, ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள் ஆகியோரிடையே வெறுப்பை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் இந்த முயற்சியில் அவர்கள் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டனர். இந்திய மக்களை யாராலும் பிரிக்க முடியாது.

காஷ்மீரின் நிலத்தை மட்டுமின்றி அதன் மக்களையும் நாம் நேசிக்கிறோம் என்பதை காஷ்மீர் மக்களுக்குக் நான் கூற விரும்புகிறேன். உங்களின் கைகளில் கற்களையும், ஆயுதங்களையும் இருப்பதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. மாறாக உங்கள் கரங்களில் பேனா, கணினிகள், வேலைவாய்ப்புகள் ஆகியவை இருப்பதையே பார்க்க விரும்புகிறோம்'.

 

எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை நிறைந்த போராட்டம் தீர்வாக இருக்க முடியாது. முதலில் அமைதி நிலவ வேண்டும். அதன் பின் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரைச் சீரழிக்கவும் அங்கு அமைதியைக் குலைக்கவும் பாகிஸ்தான் விரும்புகிறது" என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close