Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூய்மை பணியில் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்... கிரண்பேடியின் பேச்சால் பரபரப்பு!

புதுச்சேரி: புதுச்சேரியை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும், இல்லாவிட்டால் நான் புதுச்சேரி மாநிலத்தைவிட்டு வெளியேறி டெல்லி திரும்பி சென்று விடுவேன் என்று ஆளுநர் கிரண்பேடி கூறியதால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி ஆளுநராக ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 'வாகனங்களில் சுழல் விளக்குகளை யாரும் பயன்படுத்தக்கூடாது, வி.ஐ.பி.களுக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது' என்று அதிரடி உத்தரவுகளை போட்டுள்ளார் கிரண்பேடி.

இதேபோல், புதுச்சேரி மாநிலத்தை சுத்தப்படும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் கடந்த ஜூன் மாதம் துப்புரவு பணியாளர்களுடன் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது,  'கையில் உறை, முகத்தில் மாஸ்க் போடாமல் யாரும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடக்கூடாது' என அன்பு கட்டளையிட்டார்.

இந்நிலையில், புதுவை ஜிப்மர் மாணவர்கள் சங்கம் சார்பில் ஸ்பந்தன் கலாசார திருவிழா இன்று (21-ம் தேதி) தொடங்கி வருகின்ற 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இந்த மாரத்தான் போட்டியை, ஜிப்மர் வளாகத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் பரிஜா, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, ''வசிக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது அவரவர் கடமை ஆகும். புதுவையில் துப்புரவு பணிக்கு முக்கியத்துவம் அளித்து நான் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். இன்று குரும்பாபேட் குப்பை கிடங்குக்கு சென்றபோது, அங்கு குப்பைகள் தரம் பிரிக்காமல் கொட்டி கிடந்தது. நான் ஏற்கனவே குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்கும்படி பொது மக்களிடம் வலியுறுத்தினேன். ஆனால், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவில்லை.

குப்பை அள்ளுவது என்னுடைய வேலை அல்ல. என்னுடைய ஆய்வு பணியின்போது அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வருவதில்லை. ஒரு சிலரே வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநில ம‌க்களும், அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். இன்னும் 4 வாரத்துக்குள் இதற்கு ஒத்துழைப்பு கிடைக்கிறதா? என்று பார்ப்பேன். அப்படி ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் நான் புதுச்சேரி மாநிலத்தைவிட்டு வெளியேறி டெல்லி திரும்பி சென்று விடுவேன்" என்றார்.

 

இப்படி ஆவேசமாக பேசிய ஆளுநர் கிரண்பேடி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்காமலேயே கிளம்பிச் சென்றார். மேலும், கிரண்பேடியின் இந்த ஆவேச பேச்சால் விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close