Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னை ட்விட்டரில் பின்தொடரும் 2.2 கோடி ஃபாலோயர்ஸ்!

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 22 மில்லியனாக (இரண்டு கோடியே இருபது லட்சமாக) இன்று உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நிலவரப்படி அமிதாப் பச்சனை ட்விட்டரில் பின்தொடர்ந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது லட்சமாக இருந்த நிலையில், 11 மாதங்களில் அவரை சுமார் 50 லட்சம் பேர் புதிதாக பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு இன்று மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், 'என்னை பின்தொடரும் அனைவருக்கும் நன்றி' என தெரிவித்து உள்ளார். அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியாக, ட்விட்டரில் ஷாருக்கானை 20.8 மில்லியன் பேரும், சல்மான் கானை 19 மில்லியன் பேரும், அமீர் கானை 18.3 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ