Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' களவாடப்படுகிறதா அரசின் காப்பீட்டுப் பணம்?' -அதிரும் ஆய்வு முடிவுகள்

' தனியார் மருத்துவமனைகளுடன் அரசு அதிகாரிகள் கை கோர்ப்பதால் அரசின் காப்பீட்டுத் திட்டங்களில் முறைகேடு நடக்கிறது' எனத் தொடர்ந்து பேசி வருகின்றனர் டாக்டர் சங்கங்கள். ' அரசின் காப்பீட்டு திட்டத்தின் பலன் யாருக்குச் சென்று சேருகிறது?' என்பதை துல்லியமாக தெரிவிக்கிறது தேசிய ஆய்வு முடிவுகள்.
 
தமிழக அரசின்  சுகாதாரத்துறையின்கீழ் 'விரிவுபடுத்தப்பட்ட அம்மா காப்பீட்டுத் திட்டம்' செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறுவதற்காக ஆண்டுதோறும் 750 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ' இந்தப் பணத்தில் இருபது சதவீதம் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கிறது. மீதமுள்ள 80 சதவீதத் தொகையின் பலன் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சேருகிறது. காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகளுடன் தனியார் மருத்துவமனைகள் இணக்கமாகச் செயல்படுவதால்தான், காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு நடக்கிறது' என்கின்றனர் மருத்துவர்கள் சிலர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம்(National sample survey) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்படும் விஷயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அந்த அறிக்கையில், ' மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள் நகர்ப்புறங்களில் 82 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 85.9 சதவீதமாகவும் உள்ளனர். நகர்ப்புற காப்பீடு உள்ளவர்களில் 90 சதவீத ஏழைகள் அதில் இடம்பெறவில்லை' என விவரிக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளின் காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறையில் இருந்தும் இதுதான் நிலை. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளால் கிராமப்புறங்களில் 72 சதவீதமும் நகர்ப்புறங்களில் 79 சதவீத சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளன. முந்தைய காலகட்டங்களில் கிராமப்புறங்களில் தனியாரிடம் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை 78 சதவீதமாக இருந்து வந்தது. அது தற்போது குறைந்ததுள்ளது.

மருத்துவ செலவில் மருந்தின் செலவு மட்டும் கிராமப்புறத்தில் 72 சதவீதமாகவும் நகர்ப்புறத்தில் 68 சதவீதமாகவும் உள்ளன. இதில், 75 முதல் 80 சதவீதம் பேர் சொந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நகர்ப்புறத்தில் இருந்து ஒருவர் அரசு மருத்துவமனைகளில் சிசிச்சை பெறுவதற்கு 5,636 ரூபாய் செலவாகிறது. அதுவே, தனியார் மருத்துவமனை என்றால் 21,726 ரூபாய் செலவு பிடிக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவர்களில் கிராமப்புறத்தில் 58 சதவீதமாகவும்  நகர்ப்புறத்தில் 68 சதவீதமாகவும் உள்ளனர்' என அந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது.

 

" நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஆங்கில மருந்தின் மோகம் 90 சதவீதமாக இருந்தாலும், சமீபத்தில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு மாறியவர்களின் எண்ணிக்கை 59 சதவீதமாக உயர்ந்துவிட்டது என்கிறது ஐ.எம்.ஆர்.பி(Indian Market Research Bureau) ஆய்வு. அந்தளவுக்கு தனியார் மருத்துவனைகளின் கட்டணத்தால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குடும்பத்தின் மொத்த வருவாயைவிட, கடனாளியாக மாறியுள்ளவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவிட்டன" என ஆதங்கப்படுகிறார் சூழல் சார்ந்த மருத்துவர் ஒருவர். அவர் நம்மிடம், " N
இதைவிடக் கொடுமை, கல்லீரல் மாற்று என்பது தனியார் மருத்துவ நிறுவனங்களில் அதிக லாபம் கொடுக்கும் அறுவை சிகிச்சையாக மாறியுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சைக்கு பத்து லட்சத்திற்கும் மேல் செலவாகிறது. சென்னையின் பிரபல அரசு மருத்துவமனையான மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறைக்கு உள்கட்டமைப்பு வசதியே செய்யப்படவில்லை. இதுபோன்ற சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதை அதிகாரிகள் விரும்புவதில்லை. சமீபத்தில் டெல்லியில் ஐந்து மருத்துவமனைகளுக்கு ஆம் ஆத்மி அரசு அபராதம் விதித்தது. அதாவது, ' எங்கள் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு படுக்கை ஒதுக்குகிறோம்' என்று சொல்லிவிட்டு, அரசிடம் இருந்து சலுகைகளைப் பெற்றுவிட்டு மோசடி செய்ததால், அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. நமது மாநிலத்திலும் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைக் கெடுக்கும் வகையில் செயல்படும் தனியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் ஏழை மக்களுக்குச் சென்று சேரும்" என்றார் வேதனையோடு.

-ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ