Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு சம்மன்!

புதுடெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்ட் நிதி நிறுவனம், கடந்த 2013 ஆம் ஆண்டு திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இது, பொது மக்களின் பல ஆயிரம் கோடி டெபாசிட் பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அதன் நிர்வாகிகள் இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த மோசடியில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நிதி நிறுவன தலைவர் சுதீப்தா சென், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மதன் மித்ரா, எம்.பி. குணால் கோஷ், ஜெய் போஸ், டி.ஜி.பி. ரஜத் மஜூம்தார் ஆகியோர் கைது செய்யபட்டனர். அத்துடன், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட பலர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் மனோ ரஞ்சனா சிங், சொந்தமாக தொலைகாட்சி சேனல் தொடங்க முயற்சித்ததாகவும், இதற்காக சுதீப்தா சென் பல கோடி வரை கடன் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கும் தொடர்புள்ளதாக சுதீப்தா சென் சி.பி.ஐ.க்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் நளினி சிதம்பரம் பெயரையும் சேர்த்தது. அத்துடன், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், நளினி சிதம்பரத்தை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை தற்போது சம்மன் அனுப்பி உள்ளது.

இதே வழக்கில் சிபிஐ தரப்பில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நளினி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ