Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிரம்ஸ் வாசிப்பில் உலக சாதனை படைத்த ஷிருஷ்டி!

சாதிக்க நினைப்பவர்கள் ஏராளம். அதில் சிலர் மட்டுமே வெற்றிக் காண்பார்கள். அந்த வரிசையில் தான் கற்றக் கலைக்கொண்டு எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பி அசத்தியிருக்கிறார் ஷிருஷ்டி. உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது ஷிருஷ்டி படிதார் என்ற பெண். இவர், சமீபத்தில் தொடரச்சியாக டிரம்ஸ் வாசித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.

உத்திரப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள பல்டா என்ற சிறிய கிராமம்தான் ஷிருஷ்டியின் சொந்த ஊர். இவருக்கு டிரம்ஸ் வாசிப்பது மிகவும் விருப்பம். அந்தக் கிராமத்தில் அதற்கான வசதி இல்லாததால் இந்தூரில் உள்ள பப்லூ சர்மாவிடம் டிரம்ஸ் கற்க சேர்ந்தார். தன்னுடைய ஆர்வத்தால் சீக்கிரமாகவே அதைக் கற்றுக்கொண்டார். சரி, தனக்கு நன்றாக டிரம்ஸ் வாசிக்கத் தெரியும் என்று எத்தனைப் பேருக்கு சொல்லமுடியும்.

எல்லோருக்கும் தன் டிரம்ஸ் சத்தம் கேட்க வேண்டும் என்று என்னிய ஷிருஷ்டி, தானாகவே முன்வந்து இந்தூரில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் தொடர்ச்சியாக 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து, உள்ளூர் மட்டும் அல்ல உலகத்தையே தன் பக்கம் திரும்பி வைத்ததுள்ளார். ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12.30 மணிக்கு டிரம்ஸ் வாசிக்க ஆரம்பித்த ஷிருஷ்டி, மறுநாள் அதாவது செவ்வாய் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக வாசித்துள்ளார். இதன் மூலம் உலகிலேயே அதிக நேரம் டிரம்ஸ் வாசித்த பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் 24 மணி நேரம் தொடர்ச்சியாக டிரம்ஸ் வாசித்ததே உலக சாதனையாக இருந்துள்ளது. தற்போது ஷிருஷ்டி அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

-என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்