Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாண் ரசிகர்கள் மோதலில் ரசிகர் கொலை!


ஆந்திராவில் பிரபல நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர்., பவன் கல்யாண் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் மற்றும் என்.டி.ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர்., ஆகியோர் மிக பிரபலமான நட்சத்திரங்கள். தமிழகத்தில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே பேச்சளவில் எழும் கருத்து மோதல்களைப் போன்று ஆந்திராவின் பல பகுதிகளிலும், பவன் கல்யாண், ஜுனியர் என்.டி.ஆர். ரசிகர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் எழுவதுண்டு.

நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர், அங்கிருந்த ஒலிபெருக்கியில் அவரை வாழ்த்தி கோஷங்களைப் போட்டுள்ளார். இதற்கு அப்பகுதியில் இருந்த ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகரான சுனில் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

அப்போது அடங்கியிருந்த, இந்த விவகாரம், வினோத் சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்திற்கு சென்றபோது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் தடித்துள்ளது. வினோத்துக்கும், சுனிலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், சுனிலின் நண்பர் அக்சய் குமார் என்பவர் தான் வைத்திருந்த கத்தியால், வினோத்தின் வயிற்றை பதம் பார்த்தார்.

கத்தி குத்து காயங்களுடன் இருந்த வினோத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இத்தகவலறிந்து வருத்தமடைந்த நடிகர் பவன் கல்யாண் திருப்பதியில் உள்ள வினோத் குமாரின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். திருப்பதியில் உள்ள வினோத்தின் வீட்டுற்கு பவன் கல்யாண் சென்றபோது பல்லாயிர கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, போலீசர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட பவன் கல்யாண், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுபோன்ற வன்முறையில் ரசிகர்கள் இறங்க வேண்டாம் என்றும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், இன்று மதியம் இறந்த ரசிகரின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

-வே. கிருஷ்ணவேணி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ