Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோலூன்றிக்கூட நடக்க முடியாத நிலையில் ம.தி.மு.க.! - சாடும் தமிழிசை

புதுடெல்லி: தமிழகத்தில் பா.ஜ.க. ஒருபோதும் காலூன்றாது என்று தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது வைகோ கூறினார். ஆனால், கோலூன்றிக்கூட நடக்க முடியாத நிலையில் வைகோவின் ம.தி.மு.க. உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறி உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ''புதிய கல்விக் கொள்கை விவகாரத்தை எழுப்பியாவது தனது கட்சிக்கு அரசியல் அடையாளம் தேடிக்கொள்ள வைகோ முயலுகிறார். ஆனால், கல்விக் கொள்கை இன்னும் வரைவு நிலையிலேயே உள்ளது. வைகோவுக்கு இதில் உண்மையிலேயே ஆட்சேபம் இருந்தால், அந்த வரைவுக் கொள்கை தொடர்பான தனது கருத்தை அதற்கென வரையறுக்கப்பட்ட இணையதளத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.

அதில், வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்கலாம் என்பதை வைகோவுக்கு இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். கருத்துகளை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு வாய்ப்பு வழங்கிய பிறகும் உள்நோக்கத்துடன் வைகோ அறிவித்துள்ள போராட்டம், பா.ஜ.க. மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே தவிர வேறு ஏதுமில்லை.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மாநிலத்தில் பா.ஜ.க. ஒருபோதும் காலூன்றாது என்று வைகோ கூறினார். ஆனால், வைகோவால் இப்போது கோலூன்றிக்கூட நடக்க முடியாத அளவுக்கு அவரது கட்சி தள்ளாடுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வரைப் பாராட்டுவதற்கு மட்டும் நேரம் ஒதுக்காமல் மக்கள் பிரச்னைகளை விவாதிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. மேலும், தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சி சரியான முறையில் வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் நிலையில் இல்லை.

பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராகவும் வழிநடத்தும் தலைவராகவும் இருக்க வேண்டிய மு.க. ஸ்டாலின், வெளிநடப்பு செய்யும் தலைவர்' போல செயல்படுகிறார். இந்தத் தலைவர்களை தி.மு.க. தலைவர் கருணாநிதி வந்துதான் வழிநடத்த வேண்டும்" என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close