Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களை கேலி செய்த 50 இளைஞர்கள் அதிரடி கைது!

புதுடெல்லி: டெல்லியின் குருகிராம் பகுதியில் சாலையில் செல்லும் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்த 50 இளைஞர்களை போலீசார் அதிரடியாக 2 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் குருகிராம் பகுதியிலுள்ள மகாத்மா காந்தி சாலையில், வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்திருக்கிறது. இதை தொடர்ந்து, 'ஆபரேஷன் ரோமியோ ரிட்டன்ஸ்' என்ற பெயரில் பெண்களை கேலி செய்பவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டு களமிறங்கினார்கள்.

அதை தொடர்ந்து, மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு இரண்டு மணி நேரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், சாலையில் செல்லும் பெண்களை கேலி செய்திருக்கின்றனர். இதை தொடர்ந்து போலீசார், பெண்கள் மற்றும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்த 50 இளைஞர்களை அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.

 

அதிகாலையில் போலீசார் நடத்திய இந்த அதிரடி வேட்டை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ