Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால்... - சுப்ரமணியன் சுவாமி என்ன சொல்கிறார்?

புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை 60 டாலர்களை தாண்டினால், இந்தியா மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்திக்கும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்விட் செய்துள்ளார்.

2013-14-ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 112.7 டாலராக இருந்தபோது, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 143 பில்லியன் டாலர்களை இந்தியா செலவிட்டுள்ளது. ஆனால் 2015-16-ம் ஆண்டு, ஒரு பேரலுக்கு 48 டாலராகவிலை சரிந்ததால், 63.96 பில்லியன் டாலர்களை மட்டுமே இந்தியா செலவிட்டுள்ளது. இதனால், இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைத்தது.

தற்போது கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஒரு பேரலுக்கு 47 முதல் 49 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும் என பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ''இந்தியாவின் 80 சதவீத கச்சா எண்ணெய் தேவை இறக்குமதியை சார்ந்தே இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் செலவிட வேண்டியுள்ளது. குறிப்பாக, ஒரு பேரலுக்கு ஒரு டாலர் விலை அதிகரித்தால் ஒரு ஆண்டுக்கு ரூ.9,126 கோடியை நாம் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும். இதுமட்டுமல்ல, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அது நாட்டின் பணவீக்கம் மற்றும் வளர்ச்சியையும் பாதிக்கும்.

மேலும், எனது ட்விட்டர் கணக்கை பின்தொடர்பவர்களில் யாரேனும் எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை எப்படி இருக்கும் என கணிக்க தெரிந்தவர்கள் இருந்தால், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை நிலவரம் எப்படி இருக்கும் என எனக்கு தெரிவியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ