Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம், 5 ஆண்டுகள் சிறை!

புதுடெல்லி: ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரே வாரத்தில் கருப்பாக இருக்கும் நீங்கள் வெள்ளை ஆகலாம் என பிரபலங்கள் விளம்பரம் செய்வதற்கு இனி யோசிக்க வேண்டும். ஈமூ கோழி பிரச்னை ஏற்பட்டபோது, வேட்டி விளம்பரங்களில் நாங்கள் நடிக்கிறோம், அதற்காக வேட்டி கிழிந்துவிட்டால் நாங்கள் பொறுப்பா என்றெல்லாம் கூறியதுபோல், விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் இனி கூற முடியாது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழு தனது சிபாரிசுகளை அளித்துள்ளது. அதை ஏற்று, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஒரு வரைவு மசோதாவை தயாரித்து உள்ளது.

அந்த மசோதாவில், ஏமாற்று விளம்பரங்களை கட்டுப்படுத்தவும், அவற்றில் நடிக்கும் பிரபலங்களுக்கு பொறுப்புணர்வை உண்டாக்கவும் கடுமையான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏமாற்று விளம்பரங்களில் நடிப்பதன் மூலம், முதல்முறை தவறு செய்யும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், அதே பிரபலம் இரண்டாவது தடவை தவறு செய்தால், ரூ.50 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும், கலப்படம் செய்பவர்களுக்கும் இதே அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும். அதுபோக அவர்களின் உரிமமும் ரத்து செய்யப்படும். இந்த வரைவு மசோதா பற்றி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான அமைச்சர்கள் குழு கூடி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ