Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் ரகசியம் முன்கூட்டியே வெளியானதா? - விளக்கும் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: பட்ஜெட் ரகசியம் முன்கூட்டியே வெளியாகவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளித்து உள்ளார்.

புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி நேற்று 206-17 ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட் ரகசியம் முன்கூட்டியே கசிந்து விட்டதாக என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் பிரச்னையை எழுப்பினார்கள். மேலும், பட்ஜெட் ரகசியம் கசிந்து விட்டதால் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதுடன் அ.தி.மு.க.வினர் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டதில் காங்கிரஸ் உறுப்பினர் அனந்தராமன் உரையாற்றும்போது, ''நேற்று சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களும், அ.தி.மு.க.வினரும் பட்ஜெட் ரகசியம் கசிந்து விட்டதாக கூறி மோசமான வகையில் நடந்து கொண்டனர். பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் வரி விகிதங்கள் முன்கூட்டியே வெளியானால் தான் அது பட்ஜெட் ரகசியமாக கருதப்படும்.

அப்படி வெளியானால் வியாபாரிகள் பதுக்கல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதால் அது ரகசியமாக கருதப்பட்டது. துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாக தகவல் வெளியானால் அது ரகசியம் ஆகாது. இது தெரியாமல் முன்னாள் முதல்வர் தவறான முறையில் பேரவையில் நடந்து கொண்டார், இதை கண்டிக்கிறேன்" என்றார்.

இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறும்போது, ''பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் நாங்கள் அனைத்து கட்சிகளையும் கூட்டி ஆலோசனை நடத்தினோம். அப்போது, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறோம் என உத்தேசமாக தெரிவித்து கட்சியினரின் கருத்துக்களை கேட்டோம். இந்த தகவல் அடங்கிய குறிப்புகளையும் அவர்களிடம் கொடுத்தோம்.

இதைதான் இப்போது வெளியிட்டு பட்ஜெட் ரகசியம் கசிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் வரி தொடர்பாக முன்கூட்டியே வெளியே தெரிந்தால் அது ரகசியமாக கருதப்படும். துறைக்கான நிதி ஒதுக்கீடு ரகசியங்கள் பட்ஜெட் ரகசியம் ஆகாது. அதனால், எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும். இது தொடர்பான அவர்களின் புகார்களையும் திரும்ப பெற வேண்டும்" என்றார்.

இதையடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம், ''பட்ஜெட் ரகசியம் என்பது பட்ஜெட்டில் உள்ள வரி சார்ந்தது, மற்ற வி‌ஷயங்கள் ரகசியமாக கருதப்படாது என 1974-ம் ஆண்டே அப்போதைய அ.தி.மு.க. சபாநாயகர் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதனால், இப்போது பட்ஜெட் ரகசியம் வெளியாகி இருப்பதாக கூறுவதையும், ரகசியம் என்று கருத முடியாது என்று தீர்ப்பு அளிக்கிறேன்" என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close