Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடக்கூடாது! - உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மீது அரசு, தேசத்துரோக வழக்கு பதிவு செய்வதாகவும், இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதை யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘தேசத்துரோகம் ஒரு கடுமையான குற்றம். ஆனால் கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள், கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி ஆகியோர் மீதுகூட தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது' என அவர் சுட்டிக்காட்டி வாதாடினார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ''அரசை விமர்சிக்கும் விதமாக யாராவது கருத்து தெரிவித்தால், அது தேசத்துரோக அல்லது அவதூறு சட்டத்தின் கீழ் குற்றமாகாது. தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்யும்போது (இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124(ஏ)-ஐ), உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

தேசத்துரோக சட்டம் குறித்து நாங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக பீகார் மாநில அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங்கின் வழக்கில், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெளிவாக விளக்கி உள்ளது" என்றும் தெரிவித்தனர்.

ஆனாலும், இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும், காவல் துறைத் தலைவர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ