Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி F05 ராக்கெட்!

ன்சாட்-3டி.ஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதற்கான 29 மணி நேர கவுண்டவுன் நேற்று (புதன்கிழமை) காலை 11.10 மணிக்கு தொடங்கியது. 29 மணிநேர கவுண்டவுன் முடிந்த நிலையில், நிர்ணயித்த நேரத்தைவிட 40 நிமிடங்கள் தாமதமாக, ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் சீறிப்பாய்ந்த இந்த ராக்கெட் இந்தியாவின் 10-வது ‘ஜி.எஸ்.எல்.வி' ரக ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டிலுள்ள இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோளின் எடை 2,211 கிலோ. காலநிலைக்கு ஏற்ப, வானிலை நிலவரத்தை மிக துல்லியமாக கணிப்பதற்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரையோஜெனிக் இன்ஜின் செயல்பாடு:

இந்த செயற்கைக்கோளை விண்ணுக்கு எடுத்துச் சென்ற ஜி.எஸ்.எல்.வி-எப்.05 ராக்கெட்டில் 'கிரையோஜெனிக் இன்ஜின்' பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. ராக்கெட்டில் உள்ள 'கிரையோஜெனிக் இன்ஜின்' செயற்கைக்கோளை புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்த உதவி செய்கிறது. இந்த இன்ஜின் மூலம் 8 டன் வரை எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். 
ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் குளிர்வித்து அதனை திரவ வடிவத்தில் எரிபொருளாக பயன்படுத்துவதுதான் இந்த கிரையோ ஜெனிக் தொழில்நுட்பம். இந்த இன்ஜினில்தான் அதிக உந்துசக்தி கிடைக்கும். அதன் மூலம் ராக்கெட் விண்ணை நோக்கி சிறப்பாக சீறிப்பாயும். ஹைட்ரஜன் வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸிலும், ஆக்சிஜனை மைனஸ் 184 டிகிரி செல்சியஸிலும் குளிர்வித்தால் அது திரவமாகும். இந்த திரவங்கள் ராக்கெட்டின் முன்புறத்தில் தனித்தனி இடங்களில் சேமித்து வைக்கப்படும். ராக்கெட் உயரே செல்லும்போது இந்த இரண்டும் ராக்கெட்டின் கீழ்ப்புற முள்ள பகுதியில் வாயுவாக மாறி ஒன்றுசேர்ந்து எரிந்து சிறப்பான உந்துசக்தியை வெளிப்படுத்தும். 

ராக்கெட்டின் செயல்பாடு இதுதான்:

இந்த ராக்கெட் கொண்டு செல்லும், இன்சாட்-3டிஆர் செயற்கைகோள் தகவல் தொடர்பு, வானிலை பற்றிய தகவல்கள், இராணுவத் தகவல்கள் மற்றும் கடல்சார் போக்குவரத்திற்கான தகவல்களை அளிக்கும். அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இருக்கும் சந்திராயன்-2 செயற்கைகோளையும் இந்த ஜி.எஸ் எல்.வி ராக்கெட்டே எடுத்துச்செல்லும். அதனால் இந்த ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட்டின் பயணம் மிக முக்கியமானது. இது ஏவப்பட்ட 17-வது நிமிடங்களில் தன்னுடைய சுற்றுவட்டப்பாதையை(ஆர்பிட்டால்) அடையும். அடுத்த 20 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள் பிரிந்து செல்லும். இந்த ராக்கெட் 49 மீட்டர் உயரமும், 415 டன் எடையும் கொண்டது. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இந்த ராக்கெட் செலுத்துதலின் பயனாக விண்வெளிச்சந்தையில் இந்தியாவின் மதிப்பு பலமில்லியன் டாலராக உயரும். 
பூமியிலிருந்து 36,000 கி.மீ தொலைவில் செயற்கைகோள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். அதன் பிறகு தானாகவே சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்கும் வகையில் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில் நுட்பத்துடன் 2 ,211 கிலோ எடையுடன் இந்த இன்சாட்-3 D.R செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
       அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகள் வரை இந்த செயற்கைகோள் இஸ்ரோவிற்கு தகவல்களை அனுப்பும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஆண்டுகளில் எவ்வளவோ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் பங்கு முக்கியமானது. இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், செஷல்ஸ் தீவு, இலங்கை, தான்சானியா போன்ற நாடுகளின் வானிலை தகவல்களையும் இந்த செயற்கைக்கோள் கொடுக்கும். கடந்த ஒன்பது முறை அனுப்பப்பட்ட ஜி.எஸ்.எல்.வி இராக்கெட், ஐந்து முறை தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- துரை.நாகராஜன்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close