Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இன்ஜினியர்' நூலகன்... இவரைத் தெரியுமா உங்களுக்கு?

'சிறந்த புத்தகம் நல்ல நண்பன் போன்றது' என்பார்கள். நமக்கு அறிவைப் புகட்டுவது புத்தகங்களே. இன்றைய குழந்தைகள், பாட புத்தகங்களைத் தவிர கதை, காமிக்ஸ், சிறுவர் இதழ்கள் போன்றவற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. பாடப் புத்தகங்களையே சிரமப்பட்டு வாங்கித் தரும் பெற்றோர்களால் கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதுபோன்ற சிறுவர்களுக்காகவே கதை, காமிக்ஸ், சிறுவர் இதழ்களைக் கொடுத்து படிக்க உதவி செய்துவருகிறது கொல்காத்தாவில் இயங்கும் 'Wall O Books.'

கான்பூர் ஐ.ஐ.டி-யில் இன்ஜினீயரிங், ஜெர்மனியில் எம்.பி.ஏ படித்த சன்ஜுக்த் கே.சாஹா (Sanjukt K. Saha) என்பவர் ஒன் பில்லியன் மைண்ட்ஸ் (One Billion Minds) என்ற கன்சல்டன்ட் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஏழைச் சிறுவர்களைப் பாடப் புத்தகங்கள் தவிர, மற்ற புத்தகங்களையும் படிக்கவைப்பதே இவருடைய லட்சியம். இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டு உருவானதுதான் இந்த 'வால் ஓ புக்ஸ்' நூலகம். 2013-ல் கொல்கத்தாவில் உள்ள All Children Together Trust எனும் அனாதை விடுதியில், 8 முதல் 15 வயதின படிக்கும் 100 புத்தகங்கள் கொண்ட முதல் நூலகத்தைத் தொடங்கினார். இதனைப் பற்றிய செய்தி, கொல்கத்தா நகரவாசிகள் மத்தியில் பரவியது. சிலர், ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கித்தந்தும் நிதி உதவி செய்தும் ஆதரவு தந்தார்கள். இதன்மூலம் அரசாங்கப்  பள்ளிகளிலும், ஏழை மாணவர்கள் படித்துவரும் தனியார் பள்ளிகளிலும் நூலகங்களைத் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டது. ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலப் புத்தகங்களை அங்கு வைக்கப்பட்டது.

பள்ளிச் சுவரை ஓவியங்களால் அலங்கரித்து, கயிற்றைக் கட்டி, அதில் புத்தகங்களைத் தொங்கிவிடுவார். ஒரு நூலகத்துக்கு சுமார் 100 புத்தகங்கள் வரை இருக்கும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூலகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நூலகத்திலும் சுமார் 100 மாணவர்களாவது படிப்பார்கள் எனக் கூறும் சன்ஜுக்த், "குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஒரு நூலகத்தில் இருந்து மற்றொரு நூலகத்துக்கு புத்தகங்கள் மாற்றி வைக்கப்படும். இதற்காக, கொல்கத்தாவில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்துவருகிறது" என்றார்.

தொண்டு நிறுவனங்களின் மூலம், மக்களிடமிருந்து இருந்து பழைய கதைப் புத்தகங்கள், சிறுவர் இதழ்கள் பெறப்படுகின்றன. படிக்க மட்டும் அல்லாமல், கடிதம் எழுதவும், கதை எப்படிச் சொல்ல வேண்டும் போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. அந்தந்த நூலகங்களைப் பராமரிக்க மாணவர்களை நியமித்துள்ளார். மற்ற மாநிலங்களிலும் 'வால் ஓ புக்ஸ்' நூலகங்களைத் திறக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. முதல் கட்டமாக தில்லியில் ஆறு நூலகங்களைத் திறந்துள்ளனர். இதனால், மாணவர்களிடம் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.  சன்ஜுக்த், பூட்டானில் பிறந்தவர். அப்பா ஸ்கூல் பிரின்ஸிபல். 'வீட்டில் பலவிதமான புத்தகங்கள் இருக்கும். அவற்றைப் படித்துதான் என் அறிவை வளர்த்துக்கொண்டேன்' எனச் சொல்லும் இவர், வசதி இல்லாத சிறுவர்களுக்கு மற்ற புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு இருக்காது. ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்காக உதவவேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்த நூலகங்களை ஆரம்பித்தேன் என்கிறார், சன்ஜுக்த்.

நல்ல நோக்கம் நிறைவேறட்டும்.

 

-என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ