Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி விவகாரம்: கர்நாடகத்தில் இன்று "பந்த்''; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் இன்று அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு செப்.6-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மண்டியா, மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து 4-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றன.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த கோரி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

 

கர்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபயம் ஏற்படுள்ளது. கர்நாடக முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை அரசு, தனியார் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், தொழில்சாலைகள், அங்காடிகள், உணவகங்கள், அடுக்குமாடி வணிக வளாகங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன

அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள், லாரிகள், தனியார் வாகனங்கள், வேன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன . தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது  படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள், வாடகை கார்கள்,  ஆட்டோக்கள்,  லாரிகள் போராட்டத்தின் காரணமாக ஓடாது. ரயில் சேவை வழக்கம் போல இயக்கப்படுகின்றன.

கர்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு கர்நாடக அரசு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ