Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’பிட்’ கலாசாரத்துக்கு கடிவாளம்... டிஜிட்டலுக்கு மாறும் பீஹார்!

 

பீஹார் அரசு, பள்ளித்தேர்வுகளில்' நடக்கும் ,முறைகேடுகளை தடுக்க டிஜிட்டல் தேர்வு முறைக்கு மாற முடிவு செய்துள்ளது.  இனி 10, 12 வகுப்பு தேர்வுகள் வினாக்கள் கம்ப்யூட்டரில் கொடுக்கப்படும். இந்த தேர்வு முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த பட உள்ளது. 


பீஹாரில் நடக்கும்னு 10வகுப்பு 12 வகுப்பு தேர்வுகள் உலக புகழ் பெற்றவை . தேர்வு அறையில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவ–மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு, காப்பி அடிப்பதற்காக ஜன்னல் வழியாக பிட்டுகளை வழங்குவது உண்டு. சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்தும் கொடுத்தனர்.ஏற முடியாதவர்கள், கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினார்கள். இன்னும் சிலர் நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள். மொத்தத்தில் தேர்வு அறைகளில் இருந்த எல்லா மாணவர்களுமே பயம் இன்றி வெற்றிகரமாக தேர்வை எழுதினார்கள். இந்த காட்சியை, பத்திரிகை புகைப்படக்காரர்கள்  படம் பிடித்து, பீகாரில் பள்ளிக்கூட தேர்வு எப்படி நடக்கிறது? என்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார்கள். இவ்விவகாரம் சர்வதேச அளவில் செய்தியானது.

கடந்த வருட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் , அறிவியல் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை, செய்தியாளர்கள் பேட்டி எடுத்த போது, அவருக்கு அறிவியல் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதது தெரியவந்தது. இதே போல, அதிக மதிப்பெண்ணுடன் டாப் ரேங்க் பெற்ற மாணவர்களும் உளறிக் கொட்டினர். இந்த விவகாரம்மும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, டாப் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்ச்சி அடையாத 13 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் . இனி எதிர்க்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும், அவர்களுக்கு உதவிசெய்யும் பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் காப்பி அடிக்கும் மாணவர்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள், என்றும் அம்மாநில கல்வித்துறை எச்சரித்தும் பார்த்தது. 

இதனை தொடர்ந்து கோவா ஒடிசா மாநிலங்களை போன்று டிஜிட்டல் தேர்வு முறைக்கு மாற உள்ளது பீகார்.

இது குறித்து பீகார் பள்ளி கல்வி துறை தலைவர் ஆனந்த் கிஷோர் கூறுகையில் டிஜிட்டல் தேர்வுகளை நடத்தும் மாநிலங்களில் அது செயல் படும் முறைகள் குறித்து பார்வையிடவுள்ளோம்.ஆசிரியர்களுக்கு இது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.இத் திட்டத்துக்கு அதிக எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்கள் தேவை படுவதால் அடுத்த 2017 கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளதாகவும். இம் முறையில் மாணவர்கள் தேர்வு எழுதிய விடை தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஆசிரியர்கள் திருத்துவதற்க்கு அனுப்பபடும்.ஒரிஜினல் விடை தாள்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும்.திருத்துவதில் ஏதும் குளறுபடி ஏற்பட்டால் நகல் விடை தாள்கள் ஒரிஜினலுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

-பிரம்மா

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ