Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாட்டின் பாதுகாப்புக்கு கடல்வழி பயங்கரவாதம் அச்சுறுத்தல்! - ராஜ்நாத் சிங்

கோவா: கடல்பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

'சாரதி' என்ற புதிய கப்பலை கடலோரக் காவல் படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கோவா மாநிலம் வாஸ்கோவில் நடைபெற்றது. இந்த சாரதி கப்பல், கோவா கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. அந்தக் கப்பலில் அதிநவீன வழிகாட்டுதல் கருவி, தகவல்தொடர்பு சாதனங்கள், சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கடல்பகுதியில் எண்ணெய்க் கசிவால் மாசு ஏற்படும்பட்சத்தில், அதை நீக்கும் கருவியும் இந்த சாரதி கப்பலில் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்தக் கப்பலை அர்ப்பணித்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றும்போது, ''கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடல்வழியாக ஊடுருவி பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடல்வழி பயங்கரவாதம் தொடர்பான பிரச்னைகளுக்கு மத்திய அரசு வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளது.

நமது நாட்டின் கடலோரப் பகுதி மிகவும் பரந்து விரிந்தது. கடல்வழி பயங்கரவாதம் நமது நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டு, நமது கடல்பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் மிகவும் பலவீனமான இடங்களைக் கண்டறியும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இந்தியாவின் கடற்பகுதி பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, ஒருங்கிணைந்த மற்றும் விரிவான பாதுகாப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடலோரப் பாதுகாப்புக்கு உளவு அமைப்புகளுக்கு இடையே சிறப்பான ஒத்துழைப்பு நிலவுவது முக்கியமாகும். அதனால்தான், கடலோரக் காவல் படையின் இயக்குநருக்கு, கடலோரக் காவல் படையின் கமாண்டர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடல்பகுதியின் இயற்கை சூழலைப் பேணுதல் மற்றும் பாதுகாத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடலோரக் காவல்படையினர் பணியாற்ற வேண்டும். கடல்பகுதி இயற்கை சூழலுக்கு பாதுகாப்பு அரண்களாகவும், புதிய வாய்ப்புகளாகவும் கடல்சார் சட்டங்கள் உள்ளன. இந்தியப் பாதுகாப்பு கட்டமைப்பில், கடற்படை, கடற்படைக் காவலர்கள், கடலோரக் காவல்படை ஆகியவை மையத் தூணாக திகழ்கின்றன" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ