Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைதி திரும்பியது பெங்களூரூவில்! #StatusUpdate

 

காவேரி நீர் பங்கீட்டு பிரச்னை, நேற்று விஸ்வரூபம் எடுத்து, இரு மாநிலங்களிலும், வன்முறை வெடித்துள்ளது.நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகி இருக்கிறார். நான்கு பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20-ம் தேதி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டதும், கலவரம் வெடித்தது.

@BlrCityPolice என்ற ட்விட்டர் ஐடி மூலம், இன்றைய பாதுகாப்பு நிலை பற்றி காவல்துறை அறிவுறுத்தி இருக்கிறது.பெங்களூரு முழுவதிலும் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.144 தடை உத்தரவு இன்றும் அமலில் இருப்பதால் BMTC ,BMRCL,KSRTC  பேருந்துகள் இயங்காது. பெங்களூரு முழுவதும் தற்போது அமைதியான சூழலலே நிலவுகிறது.வாட்சாப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.அதே போல்,  RR நகர்,விஜயநகர், சந்திரா லே அவுட், ராஜாஜி நகர், சந்திரா லே அவுட் உள்ளிட்ட 16 இடங்களில் இன்றும் தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருக்கிறது.

 

 

 

கடந்த இரண்டு மணி நேரமாக  BMTC பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது


ஞாயிறு அன்று கன்னட நடிகர்களைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததற்காக ஒருவரை,கன்னட அமைப்புகள் தாக்கியதாக வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதன் எதிரொலியாக நேற்று காலை ராமேஸ்வரத்தில், கன்னட வாகனங்களை சிலர் தாக்கினர். அதே போல், சென்னையில் இருந்த தனியார் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.அதன் பின்னர் நேற்று மதியத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு, மைசூர் ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது.மதியத்திற்கு மேல் ஷாப்பிங் மால்கள்  மூடப்பட்டன. 12 மணியில் இருந்து மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டது.கூடுதல் பாதுகாப்பு படையினர் வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதினார் கர்நாடக முதல்வர் சித்தாராமையா

வாகனங்கள் மீது தாக்குதல்


பெங்களூரு மைசூர் போன்ற இடங்களில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன. கர்நாடகாவில் இருந்த தமிழக வாகனங்கள் தாக்கப்படாமல் இருக்க, தமிழக  வாகனங்களில் இருக்கும் நம்பர் பிளேட்டுக்களை அகற்றி இருக்கிறார்கள்.சிலர் அதை மறைத்து இருக்கிறார்கள்."இங்குள்ள தமிழக மக்களையும், அவர்களது வாகனங்களையும் காப்பது எங்கள் கடமை..இது போன்ற செயல்களால், வன்முறையாளர்கள் இடமிருந்து பத்திரமாக வாகனங்களை மீட்க முடியும்" என்றார் கூடுதல் ஆணையர் ஹிதேந்திரா. ஆனால், அதையும் மீறி நேற்று தமிழக தனியார் பேருந்து நிலையத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட  பேருந்துகளை கிடங்கிலேயே வைத்து எறிக்கப்பட்டன.


நயண்டஹல்லியில் இருந்து குவேம்பு நகர் வரையில் இருக்கும் 3 கிமீ தொலைவிற்கு போர்க்காட்சிகள் போல், வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.நியூ டிம்பர் சாலையில் இருக்கும் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டன.வாகனங்களை எறித்ததோடு, வன்முறையாளர்கள் அதில் செல்ஃபி போட்டோக்கள் எடுக்கும் அளவிற்கு மதி இழந்து வெறியாட்டம் நிகழ்த்தினர்.

 

கன்னடம் பேசு


சில இடங்களில் கன்னட அரசு பேருந்துகளில் இருந்தும் மக்கள் இறக்கிவிடப்பட்டனர்.சில இடங்களில் மக்கள் நிறுத்தி, கன்ண்டம் பேச சொல்லி இருக்கிறார்கள். கன்னடம் பேசிய சிலரை , கன்னட நாளிதழ் ஒன்றைக் கொடுத்து, தலைப்பை படித்துக்காட்ட சொல்லி இருக்கிறார்கள்.அப்படி பேசியவர்களை மட்டும் தான் அமைதியாக செல்ல அனுமதித்து இருக்கிறார்கள்.

நேற்று மதியம் 144 த்டை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.ஆனால், அது பொய் என அறிவிக்கப்பட்டது.பின்னர் 6 மணியளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  தாமதாக தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது தான் கலவரங்களுக்கு காரணம் என சிலர் தெரிவிக்கின்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close