Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்பாவுக்கு ஷாக் கொடுக்க சித்தப்பாவின் முக்கிய பதவியை பறித்த அகிலேஷ்!

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் பதவியை பறித்ததால், முலாயம்சிங் யாதவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அகிலேஷ் யாதவ், தன் சித்தப்பாவிடம் இருந்த முக்கிய அமைச்சர் பதவியை பறித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில், முலாயம் சிங்கின் சகோதரர் சிவ்பால் யாதவ் பொதுப்பணித் துறை, நீர்ப் பாசனம், வருவாய், மற்றும் கூட்டுறவுத் துறை ஆகியவற்றை வகித்து வருகிறார்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அகிலேசுக்கும் அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அவரது சித்தப்பாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்ட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், முக்தார் அன்சாரி என்வரின் கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைக்க சிவ்பால் விரும்பினார். ஆனால், அதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சிவபால், கட்சியில் இருந்து விலக முயன்றார். ஆனால், அவரை முலாயம்சிங் யாதவ் சமரசம் செய்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென சமாஜ்வாடி கட்சி தலைவர் பதவியில் இருந்து அகிலேஷ் யாதவை முலாயம் நீக்கினார். அதோடு கட்சித் தலைவராக தனது சகோதரர் சிவ்பாலை நியமனம் செய்து அறிவித்தார். இது அகிலேஷ் யாதவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்டுத்தியது.

இதை தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்துக்குள் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கிய அகிலேஷ், தனது சித்தப்பா சிவ்பால் யாதவ் வகித்து வந்த பதவிகளை நேற்றிரவு திடீரென பறித்துள்ளார். அதற்கு பதில், முக்கியத்துவம் இல்லாத சமூக நலத்துறையை சிவ்பால் யாதவுக்கு அளித்து உள்ளார். அகிலேஷின் இந்த அதிரடி நடவடிக்கை, முலாயம்சிங் யாதவ் மற்றும், சிவ்பால் யாதவுகும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சிவ்பாலுக்கு ஆதரவாக இருந்த உத்தரபிரதேச மாநில அரசின் தலைமை செயலாளர் தீபக் சிங்காலையும் அகிலேஷ் நீக்கி உள்ளார். அகிலேஷின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் சமாஜ்வாடி கட்சியில் உச்சக் கட்ட மோதல் ஏற்ட்டுள்ளது. இதனிடையே, முலாயம் சிங் யாதவை சந்தித்து பேசிய பின், அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளதாக சிவ்பால் யாதவ் தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ