Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூரு கலவரத்தில் சில ஆறுதல்கள்!

கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் இருந்து கவலையளிக்கும் செய்திகளே வந்துக் கொண்டிருக்க ஒரு சிலத் தகவல்கள் குறைந்தபட்ச ஆறுதலை அளிக்கின்றன. காவிரியை மையமாக வைத்து தொடர்ந்து பெங்களூருவில் பல ஆண்டு காலமாக கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்போது காவிரி பிரச்னையை வைத்து கலவரத்தில் ஈடுபடலாம் என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் நகரம் பற்றி எரிந்த சமயத்தில் ஒரு சிலர் ஓடி ஓடி இனம் , மதம் , மொழிகளை கடந்த உதவி செய்வதற்காக பம்பரமாக சுற்றி திரிந்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரீத்து சிங். சாஃப்ட்வேர் என்ஜீனியர். இவரது மனைவி ரேஷ்மி.  வழக்கமாக ரேஷ்மி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப அரை மணி நேரம்தான் ஆகும். கலவரம் நடந்த திங்கள்கிழமையன்று ரேஷ்மி வீடு திரும்ப இரண்டு  மணி நேரம் ஆகியுள்ளது. வழியெங்கும் தீக்கிரையாக்கிக் கிடக்கும் லாரிகள், உடைத்து நொறுக்கப்பட்ட கார்கள், தடியடி ஆகியவற்றைக் கடந்தே ரேஷ்மி வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய ரேஷ்மி கண்ணில் கண்டவற்றை மக்கள் பட்ட அல்லல்களை கணவர் ரீத்துவிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார்.

இதனால் மனம் வெதும்பிய ரீத்து சிங், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''பெங்களூருவில் யார் எங்கே இருந்தாலும் வீடு திரும்ப முடியாமல் போனாலும் எனது வீட்டுக்கு வந்துவிடுங்கள். எனது வீடு உங்களுக்கு பாதுகாப்பளிக்கும் என வீட்டு விலாசத்துடன் '#WinBackbengaluru என ஹேஸ்டேக்குடன் பதிவிட்டிருந்தார். அந்த ஃபேஸ்புக் பதிவு பல ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டது. அதே வேளையில், ரீத்து சிங்கிற்கு எந்த மிரட்டலும் வரவில்லை. இது குறித்து ரீத்துசிங் கூறுகையில், '' எனது மனைவி கண்ணில் கண்டவற்றை என்னிடம் சொன்ன போது, மனம் பதைபதைத்தது.  யார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய நாஙகள் தயராக இருந்தோம் '' என்கிறார்.

கனகசபாபதி என்ற துணிக்கடை வியாபாரி தனது காரில் அவசரத்திற்கு மூத்த குடிமக்களுக்கும் உதவத் தயார் என போஸ்டரை ஒட்டி கலவரத்தினங்களில் பெங்களூரு நகரம் முழுவதும் சுற்றியுள்ளார். கலவரத்தின் போது தனது அனுபவங்கள் குறித்து கனகசபாபதி கூறுகையில், '' கடந்த 3 கர்நாடக பந்த்தின் போது, என்னால் முடிந்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறேன்.  இதுவரை 60க்கும் மேற்பட்டவர்களை அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளேன். இந்த கலவரத்தின் போதும் வொயிட்ஃபீல்ட் பகுதியில் நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். மற்றொருவரை ஜெயாநகர் இதய நோய் மையத்தில் கொண்டு சேர்த்தேன். மேலும் இரு நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு கொண்டு போய் விட்டேன். கலவரத்தின் போது என்னால் வீட்டில் அடைந்து கிடந்து விட முடியாது. ஒவ்வெரு கலவரத்தின் போதும் மக்கள் அடையும் துயரங்களை பார்க்கிறோம்.  அதனால், காரை எடுத்துக் கொண்டு கலவரப் பகுதிகளுக்கு போய் விடுவேன். எனது மனைவியும் குழந்தைகளும் கூட என்னைத் தடுப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களுக்கும் இதில் சந்தோஷம் '' என்றார்.

லோகித் நஞ்சுண்ட ஷெட்டி என்பவரும் அவரது நண்பர்களும் எரிக்கப்பட்ட லாரிகளின் ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்துள்ளனர். மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வட பெங்களூருவில் வீடு திரும்ப முடியாமல்  தவித்தவர்களுக்கு டாக்டர். ஹேமந்த்குமார் என்பவர் பாதுகாப்பளித்து உணவு வழங்கியுள்ளார். கலவரத்தின் போது ஹேமந்த்குமாருக்கு 40 முதல் 50 அழைப்புகள் வந்துள்ளன. அதில் பெரும்பாலானவை தமிழ் குடும்பங்களில் உதவி கோரி வந்த அழைப்புகள்.  பெரும்பாலானத் தமிழ்ர்கள் கலவரத்தின் போது வீட்டை வெளியே வர முடியாத நிலையில், நகரின் மற்றப் பகுதிகளில் தவித்த தங்கள் உறவினர்களை வீட்டுக்கு அழைத்து உதவி புரியுமாறு ஹேமந்த்குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹேமந்த்குமாரும் பலத் தமிழர்களை பாதுகாப்புடன் மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்பெண் ஒருவர் ஹேமந்த் குமாருக்கு போன் செய்து, ''தனது கணவர் புறநகர் பகுதியான மார்த்தஹல்லியில் தவிப்பதாகவும் அவர் வீட்டுக்கு வர உதவுமாறும் வேண்டியுள்ளார். ஹேமந்த்குமாரும் அவரது நண்பர்களும் அந்த அந்த பெண்ணிண் கணவரைக் கண்டுபிடித்து வீடு திரும்ப உதவியுள்ளனர். கடைகள் மூடப்பட்ட நிலையில், பலத் தமிழ் குடும்பங்களுக்கு கன்னட நண்பர்களே உணவு அளித்து வந்துள்ளனர்.

இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக தமிழகத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  கர்நாடகாவில் இருந்து ஒரு குடும்பத்தினர், தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர்.  கன்னியாகுமாரி  பெங்களூரு சாலையில் திண்டுக்கல்லில் அவர்கள் வந்த  கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது. அந்த பகுதியில் இருந்த மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு ஓடி வந்தனர். காரில் இருந்தவர்களுக்கோ ஒரே பயம். கன்னடர்கள் என்றால் தாக்குவார்களோ என்ற பீதியுடன் இருந்துள்ளனர். ஆனால், அங்கே வந்த தமிழர்கள் அந்த கன்னட குடும்பத்தினரை தைரியமாக இருக்குமாறு ஆறுதல் கூறிதோடு சுற்றி நின்று பாதுகாப்பளித்து தேவையான உதவிகளையும் செய்துள்ளனர். பின்னர் போலீசார் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால், நெகிழ்ந்து போன அந்த குடும்பத்தினர் அங்கிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

                                                                                                                                                                                                              -எம். குமரேசன்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ