Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள யுரி பகுதியில் ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே  தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவ வீரர்களும் தீவிரவாதிகள் மீது பதி தாக்குதல் தொடுத்துள்ளனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 17 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரை, ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
இதனை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ரஷ்யா பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார். அவர்  ட்வீட்டரில், “இது கோழை தனமான தாக்குதல். இந்த தாக்குதலுக்கு காரணமான தேசம் நிச்சயம் தண்டிக்கப்படும்” என்றுள்ளார்.

அதே போன்று ட்வீட்டரில்  ராஜ்நாத் சிங் இந்த  தாக்குதலுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு வருகிறார் .

இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் சமீப காலத்தில் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு  பாகிஸ்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சுமத்திஉள்ளது

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ