Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி பிரச்னையில் மோடியை தலையிட சொல்வதா? - நிர்மலா சீதாராமன்

பெங்களூரு: காவிரி பிரச்னையில் பிரதமர் மோடியை தலையிடுமாறு சொல்வது சரியல்ல என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கர்நாடக அரசும் தமிழகத்திற்கு காவிரில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டது. இதை எதிர்த்து, சில கன்னட அமைப்புகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெங்களூருவில் போராட்டங்கள் வெடித்து, 70-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மேலும், இந்த போராட்டங்களால் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே வாகன போக்குவரத்து கடந்த 12 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, காவிரி பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட்டு இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேச வேண்டும் என்று பிரதமருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார். மேலும், சித்தராமையா மற்றும் கர்நாடக அமைச்சர்களும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பா.ஜ.க.வின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காவிரி பிரச்னையில் பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தெளிவாக எடுத்து கூறியுள்ளார்.

ஆனாலும், தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. முதலமைச்சர் சித்தராமையா, காவிரி பிரச்னையில் பிரதமரை தலையிடுமாறு கூறுவது சரியல்ல. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இதில் பிரதமர் தலையிடுவது என்பது கடினமானது. சட்ட போராட்டம் மூலமே இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ