Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்துக்கு 3000 கனஅடி நீர் திறக்கவும்..! கர்நாடகாவுக்கு காவிரி மேற்பார்வை குழு உத்தரவு

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசு காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் இருமாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், காவிரி மேற்பார்வை குழு கூட்டம் டெல்லியில் காவிரி மேற்பார்வை குழுத் தலைவர் சசிசேகர் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது, சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த காேரிக்கையை ஏற்றுக்கொண்ட காவிரி மேற்பார்வை குழு, செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகுமார், காவிரி மேற்பார்வை குழு ஒவ்வொரு மாதமும் கூடும். நீர் திறக்க உத்தரவிட காவிரி மேற்பார்வை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அறிவியல் பூர்வமாக தகவல்களை சேகரித்து முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் தகவல்களை தெரிந்து கொள்ள 2 ஆண்டு தேவைப்படும். நீர் திறப்பு, நீர்வரத்து குறித்து ஆன்லைனில் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது. மேட்டூர் அணையை காவிரி மேற்பார்வை குழு ஆய்வு செய்ய வேண்டும். 3000 கனஅடி நீர் திறப்பு என்பது மிகவும் குறைவானது" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close