Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுங்கள்!’ - உயிர்நீத்த வீரரின் மகள் மோடிக்கு வேண்டுகோள்

கயா: பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அப்போது தான் பாகிஸ்தான் தன்னை திருத்திக்கொள்ளும் என்று உரி சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் மகள், பிரதமர் மோடிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்திய ராணுவத்தினரின் நடத்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து விளக்கமளித்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் ஆகியோருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களில், பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தை சேர்ந்த நாயக் சுனில் குமார் வித்யார்த்தி என்ற வீரரும் ஒருவர். இவருக்கு, கிரண் தேவி என்ற மனைவியும், ஆர்த்தி (14), அன்ஷு (12) மற்றும் ஆஷிகா (7) ஆகிய மூன்று மகள்களும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் தான் நாயக் சுனில் குமார் வித்யார்த்தி உரி முகாமில் பணி பொறுப்பை ஏற்றுள்ளார்.

உரி ராணுவ முகாமில் சுனில் குமார் கொல்லப்பட்டதை அறிந்தது முதல் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்து பெருத்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், வீரர் சுனில் குமார் வித்யார்த்தி இறந்த தகவல் அறிந்தது முதல் அவரது 13 வயது மகள் ஆர்த்தி குமாரியை தொடர்ந்து கண்ணீர்விட்டு அழுதபடியே உள்ளார். தந்த இறந்த சோகத்தில் இருக்கும் ஆர்த்தி குமாரியை தேற்ற முடியாமல் அவரது குடும்பத்தினரும், உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த செய்தியாளர்களிடம், சுனில் குமாரின் மனைவி கிரண் தேவி, ''ராணுவத்தினரை கட்டுப்படுத்தாமல் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க இப்போதாவது அரசு அனுமதிக்க வேண்டும்" என்றார்.

ஆர்த்தி குமாரியோ சோகம் ததும்ப மிகுந்த மனவேதனையுடன் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அப்போது அவர், '' என் தந்தை நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததை நான் பெருமையாக கருதுகிறேன். என் தந்தை இறக்கவில்லை, அவரது உயிரை இந்த நாட்டிற்காக தியாகம் செய்திருக்கிறார். எந்தவித முன் அறிவிப்போ இல்லாமல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதற்கு இந்தியா உடனடியாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அப்போது தான் பாகிஸ்தான் தன்னை திருத்திக்கொள்ளும், அதனால், மோடிஜி, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுங்கள்’ என உருக்கமுடன் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ