Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது கஷ்டம்... முதல்வர் சித்தராமையா!

பெங்களூரு: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவது கஷ்டம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''கர்நாடக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற பொதுமக்களும், விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும். காவிரிபடுகையில் உள்ள விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். அமைதியான முறையில் அவர்கள் தங்களது போராட்டத்தை நடத்த வேண்டும். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (செப்.21) முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், தமிழகத்துக்கு தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. அதையே வழங்க முடியாது என்ற நிலை உள்ள போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவது மிகவும் கஷ்டம்.

எனது தலைமையில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்த சாதக, பாதகங்களை ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்கப்படும். மேலும், பா.ஜ.க., ம.ஜ.த. உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மக்களவை உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்கப்படும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ