Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில்வே பட்ஜெட் இணைப்பால் எந்தவித நன்மையும் ஏற்படாது! - நிதீஷ் குமார் எதிர்ப்பு

பாட்னா: ரயில்வேக்கு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் தனி பட்ஜெட்டை கைவிட்டு, அதை பொது பட்ஜெட்டுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, 'ரயில்வே பட்ஜெட் இணைப்பால் எந்தவித நன்மையும் ஏற்படாது' என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மேலும் அந்த கூட்டத்தில், பல்வேறு பட்ஜெட் சீர்திருத்தங்களுக்கும் அமைச்சரவை இசைவு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதல்வரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான நிதீஷ் குமார், ''ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில், மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை எழுப்புவதோ, அதற்குப் பதிலடி அளிப்பதோ கூடாது. பயங்கரவாதம் தொடர்பான பிரச்னைகளில், நாடு ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்

மேலும், மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டைக் கைவிடும் முடிவால் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. இந்த முடிவால் மத்திய அரசு ரயில்வே துறைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதைதான் காட்டுகிறது. இதனால், ரயில்வே துறையின் தன்னாட்சி உரிமைக்கு முடிவு கட்டப்பட்டுவிடும்.

நாட்டின் மிகப்பெரிய அரசு போக்குவரத்து துறையான ரயில்வே மீது, ஏழை மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவால், அந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டுவிடும்" என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close