Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதஞ்சலி உள்ளே... ஃப்ளிப்கார்ட் வெளியே! ஃபோர்ப்ஸின் புதிய டாப் 100 பட்டியல் ஆச்சரியங்கள்

பிரபல ஆங்கில இதழான ஃபோர்ப்ஸ் உலக அளவிலும், நாடுகள் அளவிலும், வெவ்வேறு துறைகள் வாரியாகவும் டாப் 100 பட்டியல்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது.

இது புதுசு கண்ணா!
வழக்கம்போல பல பிசினஸ் ஜாம்பவான்கள் பட்டியலில் தங்களுடைய இடத்தைத் தக்கவைத்துக்கொண்டாலும் இந்த முறை சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து, எல்லோரையும் ஷாக்குக்கு உள்ளாக்கி இருக்கிறார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல, பதஞ்சலி நிறுவனத்தின் சி.இ.ஓ.வான பாலகிருஷ்ணா ஆச்சார்யா.

சமீபத்தில் தொடங்கப்பட்ட பதஞ்சலி  நிறுவனம் நுகர்வோர் பொருட்கள் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது. இந்தத் துறையில் பல ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் இருந்த நிறுவனங்களை சில ஆண்டுகளிலேயே பின்னுக்கு தள்ளிவிட்டு, முதல் இடத்தைப் பிடிக்க வேகமாக முன்னேறி வருகிறது.

குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் அடைந்த முன்னேற்றம் காரணமாக தற்போது ஃபோர்ப்ஸின் டாப் 100 பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு மாறியுள்ளது. கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பதஞ்சலியின் 97 சதவிகிதப் பங்குக்கு சொந்தக்காரரான பாலகிருஷ்ணா ஆச்சார்யா ஃபோர்ப்ஸின் டாப் 100 பட்டியலில் 48-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃப்ளிப்கார்ட் வெளியே!

ஆனால் டிஜிட்டல் மயம் நாளுக்கு நாள் சூடேறிக் கொண்டே வரும் நிலையில் இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் டாப் 100 பட்டியலை விட்டு வெளியேறி இருக்கிறது.  ஐஐடி டெல்லியில் ஒன்றாகப் படித்து அமேசான் நிறுவனத்தில் வேலைப் பார்த்த சச்சின் பன்சால், பின்னி பன்சால் இருவரும் தாங்கள் சேமித்து வைத்திருந்த 650 டாலர் பணத்தை வைத்து 2007ல் தொடங்கினர். ஃப்ளிப்கார்ட். 2015-ல் 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 86-வது இடத்தில் இருந்த பன்சால் சகோதரர்கள் தற்போது லிஸ்ட்டிலேயே இல்லை.

அசைக்க முடியாத அம்பானி!
ஜியோ சிம்முக்கு தெரு முழுக்க வரிசையில் காத்திருப்பதைப் பார்த்தபிறகும் அம்பானி அசைத்துப் பார்ப்போம் என்று யாராவது நினைக்க முடியுமா என்ன? வழக்கம்போல டாப் 100 இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்த ஆண்டும் அம்பானியே அமர்ந்திருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 22.7 பில்லியன் டாலர்.
இரண்டாவது இடத்தில் சன் பார்மா நிறுவனத்தின் திலிப் சங்வி உள்ளார். இவருடைய சொத்துமதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.1 பில்லியன் டாலர் குறைந்திருந்தாலும் அவர் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

- ஜெ.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ