Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி35 வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை!

ஸ்ரீஹரிகோட்டா: 8 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி35 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று (செப்.26)காலை 9.12 மணிக்கு 8 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த சனிக்கிழமை காலை 8.42 மணிக்குத் தொடங்கியது.

பி.எஸ்.எல்.வி. சி35 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), ஸ்கேட்சாட்-1 உள்பட 3 இந்திய செயற்கைகோள்கள், அல்ஜீரியா நாட்டு செயற்கைக்கோள் 3, அமெரிக்கா, கனடா நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள் என மொத்தம் 8 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன.

"ஸ்காட்சாட் 1' செயற்கைக்கோள் துருவ-சூரிய சுற்றுவட்டப்பாதையிலும், மற்ற செயற்கைக்கோள்கள் துருவ சுற்றுவட்டப்பாதையிலும் நிலைநிறுத்தப்படுகின்றன. இந்திய ராக்கெட் ஒன்று இரண்டு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறையாகும்.

இரு சுற்றுவட்டப்பாதைகளில் ராக்கெட் பயணிக்க வேண்டியிருப்பதால் இதன் பயண நேரம் இரண்டே கால் மணி நேரமாக இருக்கும். மற்ற பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் பயண நேரம் 20 நிமிடமாகும். ஸ்கேட் சாட் செயற்கைக்கோள், பூமியில் இருந்து 730 கி.மீ. சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

கடல் ஆராய்ச்சி மற்றும் பருவ நிலை ஆய்வுக்காகவும், பேரிடர் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காகவும் 377 கிலோ எடை கொண்ட ஸ்கேட்சாட்-1 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. ScatSat-1 செயற்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். வானிலை அறிக்கை, புயல் போன்ற இயற்கை பேரழிவுகளை முன்னரே கணிப்பது போன்றவற்றிற்காக இந்த செயற்கோள் பயன்பட இருக்கிறது. PISAT,PRATHAM என்ற இரு மாணவ செயற்கோள்களையும் கொண்டு செல்கிறது ScatSat-1.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ