Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெட்டிவேரு வாசம்... மோடி மேல பாசம்!

 

பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களிடம் டெலிகான்பரன்சிங் மூலமும், மான் கி பாத் என்னும் ரேடியோ நிகழ்ச்சி  மூலமும் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் காணொளி காட்சி மூலம் மோடி, நேற்று கடலூர் மாவட்ட விவசாயிகளுடன் பேசினார்.அப்போது அவர், நறுமண தாவரமான வெட்டி வேருக்கு ஏன் பெயரை மாற்றக்கூடாது என நகைச்சுவையாகக் கேட்டார். 


கடலூர் மாவட்டத்தில் நொச்சிக்காடு, தியாகவல்லி போன்ற பகுதிகளில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.வெட்டிவேர் என்னும் நறுமண தாவரத்தை அந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள். விவசாயிகள் வெட்டிவேரின் மகசூலை அதிகப்படுத்தும் நோக்கில், மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் பிரதமர் மோடி, காணொளி நிகழ்ச்சி மூலம் கலந்துரையாடினார்.


கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் வெட்டி வேரு சாகுபடி செய்துள்ளீர்கள் என பிரதமர் கேட்டதற்கு, 200மீட்டர் முதல் நான்கு கிமீ வரை சாகுபடி செய்துள்ளோம் என பதில் அளித்தனர். பிறகு , " வெட்டிவேருக்கு எவ்வாறு தண்ணீர் பாய்ச்சுகிறீர்கள்" என்றார் . கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறோம் என்றனர் விவசாயிகள்.


புதிய தொழில்நுட்பங்களையும், புதிய உயர் ரகங்களையும் கொண்டு வெட்டிவேரின் மகசூலை அதிகரிக்கும்படியும், தண்ணீரை வீணாக்காமல் விவசாயத்துக்கு பயன்படுத்துங்கள் என்றும் கூறினார் மோடி.இறுதியாக, "நாம் ஏன் வெட்டி வேரின் பெயரை மாற்றக்கூடாது?" என ஜாலியாகக் கேட்டார்."நீங்களே ஒரு நல்ல பெயரை சொல்லுங்களேன்" என கேள்வியை மோடியின் பக்கமே திருப்பினர் விவசாயிகள்.


தனக்கு இருக்கும் அத்தனை பணிகளுக்கு இடையிலும், தமிழக விவசாயிகளுக்கு நேரம் ஒதுக்கி , அவர்களோடு சகஜமாக கலந்துரையாடியாது, விவசாயிகளின் மத்தியில் புதிய நம்பிக்கையை பெற்றுத் தந்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close