Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது..! அடம்பிடிக்கும் கர்நாடகா

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீ்ர் தர கர்நாடக அரசு மீண்டும் மறுத்துவிட்டது. டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை கடந்த 20ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், "தமிழகத்திற்கு 21ஆம் தேதி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 7 நாட்களுக்கு காவிரி நீரை திறக்கும்படி கூறப்பட்டது. இந்த உத்தரவை நிராகரித்த கர்நாடக அரசு, குடி நீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அவையில் தீர்மானம் நிறைவேற்றி தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.

கடந்த 20ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த நிலையில் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு கர்நாடக அரசு தள்ளப்பட்டது. இந்த உத்தரவையும் அமல்படுத்த தவறினால் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிபதிகளின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். அதனால் இந்த உத்தரவை அமல்படுத்துமாறு சட்ட நிபுணர்கள் சிலர் கர்நாடக அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிகளின் அவசர கூட்டத்தை முதல்வர் சித்தராமய்யா இன்று கூட்டினார். பெங்களூரு விதான சவுதாவில் நடந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது. இதில் அனைத்துக்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு குறித்து நாளை டெல்லியில் நடக்கும் கூட்டத்திற்கு பிறே முடிவு எடுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அமைச்சரவையில் அவசர கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close