Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரியை வைத்து காண்டம் ஊழலை மறைக்கிறதா கர்நாடக அரசு?!

 

ர்நாடகாவில் அரசியல் சூழல் நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாகக் காவிரிப் பிரச்னை பரபரப்பாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டும் காவிரிநீரை தமிழ்நாட்டுக்குத் தரமுடியாது என்று வீம்பு செய்துகொண்டிருக்கிறது கர்நாடகா. இதைவைத்து மாநிலத்தில் ஆங்காங்கே கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கர்நாடக பி.ஜே.பி., ஆளும் கட்சியான காங்கிரஸுக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பி.ஜே.பி கட்சியின் தலைவர் ரமேஷ், ‘‘எய்ட்ஸ் தடுப்பு மற்றும் காண்டம் வழங்குவதற்கான நிதியில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் முதல்வர் சித்தராமையா, சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு பங்கு இருக்கிறது’’ எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாநிலத்தில் பாலியல் தொற்றுநோய்களைத் தடுப்பதற்காக கர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் செயல்பட்டு வருகிறது. இதனுடைய தலைவராக இருப்பவர் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாதான். இந்த நிறுவனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி செய்வதோடு, யுனிசெஃப், பில்கேட்ஸ் அறக்கட்டளை போன்றவற்றில் இருந்தும் நிறைய நிதி வந்திருக்கிறது. அது, அனைத்தையும் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த யு.டி.காதர் பொறுப்பில் இருந்தபோது ஏராளமான நிதி தவறுதலாகக் கையாளப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனத்திடம் கொள்முதல்!

மாநிலத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதும், எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதும்தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால், அப்படி எந்த விஷயத்தையும் இவர்கள் செய்யவில்லை. மாறாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததாகப் பொய்க் கணக்குகளை எழுதி இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் கீழ் சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஊழல் செய்யப்பட்டு இருக்கிறது. 82,000 பெண்கள், 29,000 ஓரினச் சேர்க்கையாளர்கள், 1,700 திருநங்கைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளித்ததாக அறிக்கை அளித்திருக்கிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களைச் சட்டரீதியாக அனுமதிக்காதபோது, கர்நாடக அரசு அவர்களுக்குச் சிகிச்சை அளித்ததாகக் கூறி இருக்கிறது. அதோடு, காண்டம் என்கிற ஆணுறை விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில், அரசு நிறுவனத்தில் இருந்து ஆணுறைகளை வாங்காமல் தனியார் நிறுவனத்திடம் இருந்து ஆணுறைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதிலும் ஊழல் நடந்திருக்கிறது’’ என்று தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக மாநில ஊழல் தடுப்பு மையத்தில் முதல்வர் சித்தராமையா மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போதைய உணவுத் துறை அமைச்சராக இருக்கும் யு.டி.காதர் இந்தக் குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த போது, ‘‘நான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தச் சிறப்பு நடவடிக்கைகள் எடுத்தேன். பி.ஜே.பி வேண்டுமென்றே பொய்ப் புகார் அளித்திருக்கிறது. நானோ, முதல்வரோ அதுபோன்ற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை’’ என்று அந்தக் குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறார்.


‘‘ காண்டம் ஊழலை மறைப்பதற்காகத்தான், காவிரிப் பிரச்னையை இன்னமும் கையில்வைத்திருக்கிறதா’’ என்று கர்நாடகாவில் அரசியல் நோக்கர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

 

- சமரன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ