Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் அமைதி திரும்ப ராணுவ அதிகாரியின் ’ஆச்சரிய’ முயற்சி!

பாகிஸ்தான் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், காஷ்மீரில் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஆனந்த்நாக் மாவட்டத்தின் ராணுவ  நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளரான கர்னல் தர்மேந்திர யாதவ் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான புர்ஹான் வானி இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. காஷ்மீரில் பல பகுதிகளில் இன்னும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படவில்லை. தலைநகர் ஸ்ரீநகரும் முடங்கித்தான் கிடக்கிறது. பெரும்பாலான இடங்களில் கடைகள், பெட் ரோல் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள்  தனியார் வர்த்தக நிறுவனங்களும் அடைத்து கிடக்கின்றன.

புர்ஹான்வானி சுட்டுக் கொல்லப்பட்ட ஆனந்த்நாக் மாவட்டத்தில் ஆங்காங்கே தொடர்ந்து வன்முறை அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.. ராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து பெல்லட் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் 82வது நாளாக இந்த மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஆனந்த்நாக் மாவட்டம்  மக்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர் .மக்களின் விரக்தியை போக்குவதற்காக அனந்த்நாக் மாவட்டத்தின் பொறுப்பாளரான கர்னல் தர்மேந்திர யாதவ் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

மிகவும் பதற்றமான பகுதிகள் அடங்கிய அனந்த்நாக் மாவட்ட கிராமங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். உள்ளூர்வாசிகள், முதிய வர்களைச் சந்தித்து கர்னல் தர்மேந்திர யாதவ் கருத்துக்களை கேட்கிறார்.  வியாபாரிகளை சந்தித்து உற்சாகமளிககும் வகையில் உரையாடுகிறார். கடைகளை திறந்து வியாபாரத்தை நடத்துமாறுத் துணிச்சல் அளிக்கிறார்.

ஆனந்த் நாக் மாவட்டத்தின் முக்கிய பிரச்னையாக இருப்பது பல மாதங்களாக பள்ளிகள் மூடிக் கிடப்பதுததான்.  இதனால், குழந்தைகளை சந்தித்தால் அவர்களிடத்தில் படிப்பு குறித்து விசாரிக்கிறார். பள்ளிகள் அடைத்துக் கிடந்தாலும் வீட்டில் இருந்து படிக்குமாறு அறிவுரை கூறுகிறார். முதியவர்களையும், சிறுவர்களையும் கண்டால் வாஞ்சையுடன் அரவணைத்துக் கொள்கிறார். அதனால், அவர்கள் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெறுவதாக தர்மேந்திர யாதவ் நம்புகிறார்.

''முன்னாபாய் எம்பிபிஎஸ் (தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ்) சினிமாவில் வரும் கட்டிப்பிடி வைத்தியத்தைதான் இங்கும் பின்பற்றுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சினிமா பார்த்தேன். அந்த காட்சி என்னை இம்ப்ரெஸ் செய்தது. தற்போது காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் இதனை செய்கிறேன். இப்போது குழந்தைகள் என்னை 'ஆர்மி அங்கிள்' என்று அழைக்கின்றனர். இந்த பெயர் நான் வாங்கியது அல்ல. சம்பாதித்தது '' என்கிறார் கர்னல் தர்மேந்திர யாதவ்.

புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கர்னல் தர்மேந்திர யாதவ், நேரடியாக களத்தில் ஈடுபட்டவர். கடந்த ஜுலை 8ம் தேதி ஆனந்த் நாக் மாவட்டத்தில் பம்ரா என்ற கிராமத்தில் இவர் தலைமையிலான குழுதான் புர்ஹான் வானி உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது.

-எம்.குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close