Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'போ மோனே தினேஷா... !'- தலையை பிய்த்துக் கொண்ட பாக். ஜெனரல்

உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி தாக்குதல் தொடுத்து 2 பாக் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 38 தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளனர். ஆனால் , 'இந்தியா மேற்கொண்ட  சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆதாரமற்றது அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. இந்திய மீடியாக்கள் ஊகச் செய்திகள் வெளியிடுகின்றன ' என பாகிஸ்தான் செய்திச் சேனலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஆஷிம் பாஜ்வா பேட்டியளித்திருந்தார்.

அந்த பேட்டியையும் தனது ஃபேஸ்புக் பக்கத்த்தில் ஆஷிம் பாஜ்வா வெளியிட்டிருந்தார். ஆஷிம் பஜ்வா வீடியோ வெளியிட்ட அடுத்த நிமிடம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஈ போல மொய்த்துக் கொண்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

குறிப்பாக ஆயிரக்கணக்கான கேரளவாசிகள் மலையாளத்திலேயே கமெண்ட்களை போட்டு ஆசிம் பாஜ்வைவை லெப்ட் ரைட் வாங்கி விட்டனர்.   அவரது  ஃபேஸ்புக் டைம்லைனில் ஏராளமான கமெண்ட்கள் மலையாளத்திலேயே இருந்தன. அப்படி  13 ஆயிரம் கமெண்ட்கள் மலையாளத்தில் பதிவிடப்பட்டிருந்தன.

''இந்தியர்களிடம் விளையாடாதீங்க ஜெனரல்... நாங்க வித்தியாசமானவங்க  உங்க லெவலுக்கு ஆப்கானிஸ்தானுக்கு போய் தலீபான்கள்ட்ட விளையாடுங்கனு' ஒரு கமெண்ட்..

'உலக போர் வரலாற்றிலேயே 'உங்க ஆட்கள  போட்டுத் தள்ளிட்டோம்னு போன் போட்டு சொல்றது நாங்கதானு ' இன்னொரு கமெண்ட் கிண்டலடிக்கிறது

மோகன்லாலின் 'நரசிம்மம் ' மலையாளப் படத்தில்  இடம் பெற்ற வசனமான 'நீ போ மோனே தினேஷா' என ஆஷிம் பாஜ்வாவை கிண்டலடிக்கிறது மற்றோரு கமாண்ட்.

'ஐயோ... நான் வேறு ஒருவரோட பக்கத்துக்கு வந்துட்டேனா... இங்கே வந்தா ஒரே மலையாளமா இருக்குதுனு ' இன்னொரு கமாண்ட்

' மிஸ்டர். ஜெனரல் நீங்கள் மோடியை மறந்து விடுங்கள், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை மறந்துடுங்க. ஆனா, மலையாளி ட்ரோலை மறக்கவே கூடாது. வேணும்னா மரியா ஷரபோவாகிட்ட போய் கேட்டு பாருங்கனு சொல்லுவாங்னு' சொல்கிறது மற்றொரு கமெண்ட். இப்படி ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மலையாள கமாண்ட்கள் ஆஷிம் பாஜ்வாவின்  ஃபேஸ்புக் பக்கத்தை ஆக்கிரமித்தன.

பொதுவாக இந்தியாவையும் இந்தியர்களையும் விமர்சிப்பவர்களை கேரளவாசிகள் ஒட்டு மொத்தமாக சமூக வலைதளங்களில் புரட்டி எடுப்பது வழக்கம். ஒரு முறை சச்சினா.. அப்படின்னா யாருனு மரியா ஷரபோவா கேட்டு வைக்க, கேரளவாசிகளிடம் சிக்கிக் கொண்டு சில நாட்கள் மரியா தவியாக தவித்தார்.

ஹாலிவுட் நட்சத்திரம் பமீலா ஆண்டர்சன் கேரளவாசிகளின் 'செல்லம்' யானையின் மீதே கை வைத்து மாட்டிக் கொண்டார். 'திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகளை பயன்படுத்தக் கூடாது ' என பமீலா ஆண்டர்சன் விவரம் தெரியாமல் பேசித் தொலைக்க, அப்புறம் என்ன... இவர்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டார்.

-எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ