Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?

இந்தியாவுடன் பாகிஸ்தான் மூன்று முறை நேரடியாக போரில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு போரிலும் பாகிஸ்தான் தனது ராணுவத்தை பூதாகாரமாக காட்ட முயலும். ஆனால், தோல்விதான் பரிசாக கிடைக்கும். சொல்லப் போனால் பாகிஸ்தான் மக்களுக்கே தங்கள் ராணுவத்தினர் மீது கடும் கோபம் உண்டு. கடந்த 1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் போரின் போது,  டாக்காவில் இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ரணுவத் தளபதி சரண்டர் ஆகி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட புகைப்படம் உலகம் முழுக்க வெளியாக பாகிஸ்தான் தலையை தொங்கப் போட்டுக் கொண்ட வரலாறும் உண்டு.

ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் பெரும் தோல்வியையும் இழப்பையும்தான் சந்திக்கிறது. நேரடிப் போர்களில் தொடர்ச்சியாக கண்ட தோல்வியின் விளைவாக  பாகிஸ்தான்  ரகசியமாகத் தீவிரவாதத்தை ஸ்பான்சர் செய்யத் தொடங்கியது. காஷ்மீர் விவகாரத்திற்கு பாகிஸ்தான் எண்ணெய் ஊற்ற,. இதன் விளைவாக  இந்தியா சந்தித்த உயிரிழப்புகள் அதிகம்.

பாகிஸ்தானை விட பல மடங்கு ராணுவ பலம் பெற்றிருந்தாலும் தற்போது 'அணு ஆயுதம் ' என்கிற ஒரே விஷயத்திற்காக இந்தியா கட்டுப்பாட்டையும் அமைதியையும்  கடைபிடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு விட்டால், சேதமும் உயிரிழப்புகளும் அதிகரித்து விடக் கூடும். உரி பதிலடிக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ‘‘காஷ்மீர் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில் எங்கள் மீது இந்தியா போரை திணித்தால், அந்த நாட்டை நாங்கள் அழிப்போம். ஷோகேஸ்சில் வைப்பதற்காக ஒன்றும் நாங்கள் அணுகுண்டு தயாரிக்கவில்லை.  பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை பயன்படுத்த தயங்கமாட்டோம். இந்தியாவை அழிப்போம்’’ என கூறியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை பாகிஸ்தானுடன் இன்னொரு போர் வந்தால், அது அணுஆயுதப் போராக மாற வாய்ப்பு அதிகம். எதிரி நாட்டுக்கு இழக்க ஒன்றும் இல்லை. நமக்கோ அப்படியில்லை. நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி சீராக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் நேரடிப் போரை விரும்பாமல்தான் #சர்ஜிக்கல்_அட்டாக்  முறைகளை கையாண்டுதான் எதிரியை  பயத்தில்  வைக்க வேண்டியது இருக்கிறது. அல்லது   முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது போல இன்னொரு வங்கதேசத்தை உருவாக்கினால் என்ன என்ற கருத்தும் உலவுகிறது . ஏற்கனவே பலூசிஸ்தான் மாகாண  மக்களை பாகிஸ்தான் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக சர்வதேச அரங்கில் குற்றச்சாட்டு உள்ளது. .

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பலூசிஸ்தான் மக்களையும் பாகிஸ்தான் மிக மோசமாக நடத்துவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்திய பிரதமர் ஒருவர் பலூசிஸ்தான் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தது இதுதான் முதல்முறை. இதையடுத்து பலூசிஸ்தான் மக்களுக்காக போராடி வரும் நைலா பலோச், ஹமால் பலோச் ஆசியோர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்திய  பிரதமர் மோடி தங்கள் போராட்டத்துக்கு துணை நிற்பார் என நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். காஷ்மீரில் பாகிஸ்தானில் தொல்லைத் கொடுத்துக் கொண்டிருந்தால், அந்த நாட்டின் மேற்கு கரையில் இன்னொரு நாடு உருவாகி விடும் என்ற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த வேண்டும்  என்பது சில போர் நிபுணர்களின் கருத்து.

இந்த சர்ஜிக்கல் அட்டாக்கினால், பாகிஸ்தான் பீதியில் இருந்தாலும் அதனை வெளிக் காட்டிக் கொள்ளாது. உண்மையைச் சொல்லப் போனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றே அது மறுக்கும். இதற்கு முன், பின்லேடனை பாகிஸ்தானில் அமெரிக்கா கொன்ற போது, 'எங்கள் நாட்டில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை'  என பாகிஸ்தான் மறுத்ததும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் இந்த 'சர்ஜிக்கல் அட்டாக்' மோடி அரசுக்கு நல்லப் பெயரைத்தான் ஈட்டித் தந்துள்ளது. ஏனென்றால் உரி தாக்குதலையடுத்து இந்திய மக்களின் கோபம் தலைக்கேறியிருந்தது. உரி அளித்த காயத்துக்கு இந்த தாக்குதல் சற்று ஆறுதலை அளித்துள்ளது.

ஆனாலும் பாகிஸ்தான் ஸ்பான்சர் தீவிரவாதத்துக்கு  நிலையான முடிவு எட்டப்பட வேண்டும். இன்னொரு ' சர்ஜிக்கல் அட்டாக் ' நடந்தால்தான் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வரும்.  அதையும் மீறி  போர் ஏற்பட்டால், சீனாவோ பிற நாடுகளோ தலையிடாத பட்சத்தில் வெறும் சில  மணி நேரத்தில் கராச்சி நகரம் நம்மிடம் வீழ்ந்து விடும்.  அணு ஆயுதம் ஏவப்பட்டால் இந்தியாவும் கணிசமான இழப்பினை சந்திக்க நேரிடும். மேலும் போர் நீடித்தால் பாகிஸ்தான் என்ற நாடே கூட இல்லாமல் போகும்.

மனிதசக்தி என்று எடுத்துக் கொண்டால், 125 கோடி இந்திய மக்கள் தொகையில்  61 கோடியே 66 லட்சம் ஆண்கள் இருக்கின்றனர். இதில் போர் முனைக்கு செல்ல  50 கோடி பேர்  ஃபிட்.   இந்தியத் தரைப்படையில் 13 லட்சத்து  25 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.  பாகிஸ்தானில் 19 கோடி சொச்சம் மக்கள் தொகை. இதில் ஆண்கள் ஏழரை கோடி. ராணுவத்தில் ஐந்தரை லட்சம் பேர் இருக்கின்றனர். இந்திய தரைப்படையில் 6,464 டேங்குகள் உள்ளன. பாகிஸ்தானிடம் 2,924 டேங்குகள் இருக்கின்றன.

இந்திய விமானப்படையில் 2,086 விமானங்கள் உள்ளன. இதில் 679 கொம்பத் ரகங்கள். அதாவது ரஷ்யத் தயாரிப்பான சுகோய் 30, மிராஜ், மிக் 29, தேஜாஸ் போன்ற ஆயுதங்கள் தாங்கி சென்றுத் தாக்கும் சூப்பர்சானிக் போர்  விமானங்கள்.  ஜாகுவார் போன்ற சாதாரண அட்டாக் ரக போர் விமானங்கள்  809  இருக்கின்றன. 19 தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. பாகிஸ்தானிடம் 950 விமானங்கள் இருக்கின்றன. அமெரிக்கத் தயாரிப்பான எப்.16 மற்றும் சீனத் தயாரிப்பான ஜே.எப்.17 போன்ற 304 ஆயுதம் தாங்கி செல்லும் போர் விமானங்களும் 394 சாதாரண போர் விமானங்களுடன் அட்டாக்கிங் ரக ஹெலிகாப்டர்கள் 54 ம் இருக்கின்றன.

இந்திய கடற்படையில் 295 போர் கப்பல்கள் உள்ளன. இரண்டு விமானம்தாங்கிக் கப்பல்கள்  இந்தியாவின் மிகப் பெரிய பலம். நீண்ட தொலைவு ஏவுகணைகளை ஏவும் ஐ,என்,ஸ் அரிஹன்ட் நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். இந்த ஆண்டு அரிஹன்ட் கடற்படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 நாசக்கார போர்க்கப்பல்கள், 14 நீர்மூழ்க்கிக் கப்பல்கள், 6 கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 197 போர்க் கப்பல்கள் 12 கடலோர ரோந்துக் கப்பல்கள் உள்ளன.

 

அணுஆயுத பட்டியலைப் பொறுத்த வரை,  இந்தியாவிடம் வஜ்ரா விமானத்தின் வழியாக வீசக் கூடிய அணு குண்டுகள் 32, ஷாம் செஷர் விமானத்தில் இருந்து வீசக்கூடிய 16 அணுகுண்டுகளும் இருக்கின்றன. அணுஆயுதம் தாங்கி சென்று தாக்கும் பிரித்திவி -2 ரக ஏவுகணைகள் 24ம்   அக்னி - 1 ரக ஏவுகணைகள் 20 , அக்னி- 2 ரக ஏவுகணைகள் 8, சுமார்  3 ஆயிரம் கிலோமீட்டர் சென்றுத் தாக்கும் அக்னி -3 ரக ஏவுகணைகள் நான்கும் இருக்கின்றன. இந்த ஏவுகணைகள் நிலத்தில் இருந்து ஏவப்படுபவை. கப்பலில் இருந்து ஏவுப்படும் தனுஷ் ரக ஏவுகணைகள் இரண்டும் கே-15 ரக ஏவுகணைகள் 12ம் இந்தியாவிடம் இருக்கின்றன.

பாகிஸ்தானிடம்  எப் -16 ரக விமானத்தில் இருந்து வீசக் கூடிய 24 அணு குண்டுகளும் மிராஜில் இருந்து வீசக்கூடிய 12 அணுகுண்டுகளும் இருக்கின்றன. இது தவிர கஜ்னாவி ஏவுகணைகள் 16 ம் ஷாகீன் -1 ஏவுகணைகள் 16ம் ஷாகீன்  - 2  ரக ஏவுகணைகள் 8ம்  சுமார் 2500 கிலோ மீட்டர் தொலைவு சென்றுத் தாக்கக் கூடிய  காவ்ரி ஏவுகணைகள் 40ம் இருக்கின்றன . காவ்ரி ஏவுகணை டெல்லி வரைத் தாக்கும் திறன் படைத்தது. இதுதவிர, நாஸ்ர் ஏவுகணைகள் ஆறும் கப்பலில் இருந்து ஏவக் கூடிய  பாபர் ரக ஏவுகணைகள் எட்டும் பாகிஸ்தானிடம் இருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தியாவும் பாகிஸ்தானும் 1947ம் ஆண்டு முதன் முறையாக காஷ்மீருக்காக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்று காஷ்மீரின் பெரும்பகுதியை கைப்பற்றி இந்தியாவுடன் இணைத்தது. 1965ம் ஆண்டு காஷ்மீரை மையமாக வைத்து மற்றொரு போர் ஏற்பட்டது. இந்த போர் ராணுவ ஒப்பந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தது.

காஷ்மீரைத் தவிர்த்து கிழக்கு பாகிஸ்தானுக்காக இந்தியா ஒரு முறை பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டது. கடந்த 1971ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதாக கூறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தது. அப்போது இந்திய ராணுவத் தலைமை தளபதியாக ஃபீல்டு மார்ஷல் ஜெனரல் சாம் மானக் ஷா இருந்தார். கிழக்கு பிராந்தியத் தளபதியாக மேஜர் ஜே.எப்.ஆர். ஜேக்கப் இருந்தார்.  பிறப்பால் இவர் ஒரு இஸ்ரேலியர். தனிநாடாக இஸ்ரேல் உருவான பின்னரும் அங்கு செல்லாமல் இந்தியாவிலேயே வாழ்ந்து மடிந்தவர்.

இந்த போரில் இவர் வகுத்த போர் தந்திரங்கள்தான் இந்தியாவுக்கு பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. கிழக்கு பாகிஸ்தானின் வெளிப்புறங்களை மட்டுமே தாக்கினால் போதும் என்ற எண்ணம் மற்ற பிராந்தியத் தளபதிகளுக்கு இருந்தது. ஆனால், அந்த ஐடியாவை புறக்கணித்து விட்டு, தனது படைகளுடன்  டாக்காவை நேரடியாகத் தாக்கினார் ஜேக்கப். அப்போது டாக்காவில் 26 ஆயிரம் பாகிஸ்தான் படைவீரர்கள் பாக் ராணுவத் தளபதி நியாஜி தலைமையில் இருந்தனர். ஜேக்கப்பிடமோ வெறும் 3 ஆயிரம் படை வீரர்கள். ஆனாலும் ஜேக்கப்பிடம் டாக்கா வீழ்ந்தது.

அதேவேளையில் மேற்கு பாகிஸ்தானின் வர்த்தகத் தலைநகரான  கராச்சியின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. அந்த நகரின் துறைமுகம், விமானப்படை மையங்க்ள்  தூள் தூளானது. முடிவில் 13 நாட்களில் போரை முடித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.  இந்த போரில் 9 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 4,350  வீரர்கள் காயமடைந்தனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். இரண்டு போர்க்கப்பல்கள், ஒரு கண்ணி வெடி அகற்றும் கப்பல், ஒரு நீர்மூழ்கிக் கப்பல், 3 ரோந்துக் கப்பல், 7 ஆயுதம் தாங்கிய படகுகளை இழந்தது பாகிஸ்தான்.

டாக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி லெப்டினன்ட்  ஜெனரல் ஏ.ஏ.கே. நியாஜி இந்திய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆரோரா முன்னிலையில் சரண்டர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு தனது வீரர்களை மீட்டு சென்றார். 'டாக்காவில் பாகிஸ்தான் சரண்டர் ' என சர்வதேச மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன. சர்வதேச அரங்கில் தலைகுனிந்த பாகிஸ்தான்,  அதற்கு பிறகுதான் தனது குள்ளநரித் தனத்தை காஷ்மீரில் தீவிரப்படுத்தியது.

இத்தனை அடி கொடுத்தும் இந்தியா அமைதியாக போய்க் கொண்டிருப்பதற்கும் பாகிஸ்தான்  இப்போது துள்ளிக் குதிப்பதற்கும் காரணம்  ஒன்றுதான் அது... அணுஆயுதம்!

-எம்.குமரேசன்

வரைகலை : வி.ராஜேந்திரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close