Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுரங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் இங்கு இதுதான் நடக்கும்...!


யற்கை வளங்களைக் காலி செய்து விட்டு மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆங்காங்கே எதிர்ப்பு எழுந்து வருகிறது. இப்போது லேட்டஸ்டாக ஜார்கண்ட் மாநிலத்தில் தேசிய அனல் மின் கழகத்துக்குச் சொந்தமான சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் 2004-ம் ஆண்டில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கொடுத்த கிராம மக்களுக்குப் போதுமான நஷ்டஈடு தரப்படவில்லை. மேலும் நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய வேலைவாய்ப்பும் தரப்படவில்லை என்று புகார் எழுந்தது.  இதனால் கிராம மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
 ஆனால், எதிர்ப்புகளை மீறி 2014-ம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

கடந்த சனிக்கிழமையன்றும்  ஹசாரிபாக் மாவட்டம் பத்காகானில்  காங்கிரஸ் எம்.எல்.ஏ நிர்மலா தேவி தலைமையில் நூற்றுக்கணக்கான கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர். ஆனால், போலீஸாரின் பிடியில் இருந்து எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் வலுக்கட்டாயமாக மீட்டனர்.  அப்போது போலீஸார் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 7 போலீஸார், 5 கிராமத்தினரும் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்தின் காரணமாக ரகுவர் தாஸ் தலைமையிலான பி.ஜே.பி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரகுவர்தாஸ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சுபோத்காந்த் சகாய் கூறுகையில், "4 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க அனைத்துக் கட்சிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் விசாரணைக்குப் பின்னர் அரசு இதற்கு பதில் அளித்தே தீர வேண்டும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ