Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'உள்ளுக்குள் உதறல்.. வெளியே தற்கொலை தாக்குதல்!' - இருமுகன் பாகிஸ்தான்

ரி தாக்குதலுக்குப் பிறகு  இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய உரி தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கியது இந்திய ராணுவம். இந்தியாவின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத பாகிஸ்தான், மீண்டும் மீண்டும் பல வழிகளில் இந்தியாவைச் சீண்டி வருகிறது.

உரி முதல் பாரமுல்லா வரை!

ஜம்மு - காஷ்மீர் பாரமுல்லாவில் உள்ள இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் மீது, நேற்று இரவு 10.30 மணிக்குக் கையெறிக் குண்டுகள் வீசியும் துப்பாக்கியால் சுட்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடந்த இந்த இடம் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட உரியில் இருந்து 102 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் நடத்திய எதிர்தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் மரணமடைந்தார். காயமடைந்த நான்கு வீரர்கள் தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாரமுல்லா ராணுவ முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஜம்மு - காஷ்மீரின் பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும், கையெறிக் குண்டுகளைப் பயங்கரவாதிகள் வீசியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதித்தனர். பாரமுல்லா பகுதிக்குக் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டதுடன், இனி பயங்கரவாதிகளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்ற வழிமுறைகளும் ராணுவப் படைகளுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.

வாகாவில் கல்வீச்சு!

வாகா - அட்டாரி எல்லைப் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான தினசரி கொடி அணிவகுப்பு நிகழ்வு நேற்று நடந்தது. பதற்றமான சூழ்நிலை காரணமாக இதில், பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கவில்லை. கடைசியில், 300 பேர் மட்டும் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் அணிவகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், பாகிஸ்தான் நாட்டு எல்லையில் இருந்து கற்களும் வீசப்பட்டன. அமைதியாக நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வில், பாகிஸ்தான் நடத்திய கல்வீச்சு, சூட்டைக் கிளப்பியுள்ளது.

உதறலில் பாகிஸ்தான்!

‘என்னதான் திடீர் திடீர் என இந்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தி, நாங்கள் வலிமையாக உள்ளோம்’ என பாகிஸ்தான் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் உதறலுடன் உள்ளார்களாம். “இந்தியாவுடன் போர் எப்போது தொடங்கும் என யாருக்கும் தெரியாது. மோடி ஒரு வலிமையானவர். அவர், நம்மீது தாக்குதல் நடத்த தயங்கமாட்டார். இந்தியப் படைகளை நாம் தோற்கடிக்க 35 சதவிகிதம் மட்டுமே வாய்ப்புகள் உள்ளன’’ என பாகிஸ்தான் அதிகார மட்டத்தில் பயம்கலந்த பேச்சுகள் உள்ளன. ‘‘போர் தீவிரமாகி, இந்தியா நம் படைகளை வீழ்த்திக்கொண்டிருந்தால், நம்மைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்ற திட்டமும் பாகிஸ்தானிடம் உள்ளதாம்.

- ஆ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்