Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய எல்லையில் பாகிஸ்தான்  மீண்டும் தாக்குதல்..!  பதற்றம் அதிகரிப்பு

ந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, காலை 11 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ பாதுகாப்பு மக்கள் தொடர்பாளர் மனிஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகளைக் குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் ஒப்பந்தங்களை மீறி, இரு நாடுகளுக்கும் இடையே போரை தூண்டும் விதமாக, பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை 11 மணி அளவில் சிறிய ரக துப்பாக்கி மற்றும் தானியங்கி கருவிகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளதாக மனிஷ் மேத்தா தெரிவித்தார். 

மேலும், இந்திய எல்லையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் ஊடுருவ முயன்றபோது, ராணுவ வீரர்கள் துப்பாகி சூடு நடத்தி உள்ளனர். இதில் அவர் திரும்ப ஓடிவிட்டனர். தொடர்ந்து எல்லையில் வேறு யாரேனும் ஊடுருவாமல் இருக்க எல்லை பாதுகாப்பு வீரர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பாதுகாப்பு படை வீரர் குர்தாஸ்பூர் தெரிவித்தார். 

முன்னதாக நள்ளிரவில் பாரமுல்லாவின் ஜபான்ஸ்பாரா பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்புப் படையின் முகாமுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்து ராணுவத்தின் 46-வது பட்டாலியன் முகாமுக்குள் புகுந்து கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு வீரர் படுகாயம் அடைந்தனர். மேலும், பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் கடிதத்தை சுமந்து வந்த புறாவை பஞ்சாப் எல்லை போலீசார் பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். அந்த கடிதத்தில், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என உருது மொழியில் எழுதப்பட்டிருந்ததாகவும், இந்த கடிதம் பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதாகவும், போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதேபோல், கேரளாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதனிடையே எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முப்படைத் தளபதிகள் தல்பீர் சிங், அரூப்ராஹா, சுனில் லம்பா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு குறித்து பல முக்கிய முடிவுகள் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கியமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

- ரா.வளன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close