Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் நகரம் தூய்மை அடைந்து விட்டதா? - சுவச் பாரத் திட்டம் #SwachhBharatWeek #2YearsOfSwachhBharat

காத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளுக்குத் ‘தூய்மையான இந்தியாவை உருவாக்கி, அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்’ என்று ஆரம்பிக்கப்பட்ட திட்டம்தான் சுவச் பாரத். அக்டோபர் 1, 2014-ல் பிரதமர் நரேந்திர மோடியால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 2 வருடங்கள் முடிந்துவிட்டன.

சுவச் பாரத் திட்டத்தில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து, அந்த ஒன்பது பேருடன்... மற்ற ஒன்பது பேரைச் சேர்த்து இந்தியாவைத் தூய்மை ஆக்குவதே மோடியின் திட்டம். தூய்மையை உருவாக்க வேண்டுமெனில், ‘நாமே கையில் துடைப்பம் எடுக்க வேண்டும்’ என்று காந்தி சொன்னதுபோல... நரேந்திர மோடியும், ‘‘தெருவில் குப்பைப் போடுவதைத் தவிர்த்து, மற்றவர்களையும் போடவிடாமல் தடுக்க வேண்டும்’’ என்று சொன்னார்.

இந்தியாவைச் சுத்தமான நாடாக மாற்ற வேண்டும் என்பதில் பல இந்தியர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு ஆர்வத்தை வெளிபடுத்தினர். இது, தேசிய இயக்கமாக மாறியது. முதலில் இருந்த ஆர்வம் போகப்போகத் தொடரவில்லை. இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில், 4 மாநிலங்களில் மட்டுமே சுகாதாரமான நிலை காணப்படுகிறது என ஓர் ஆய்வில் சொல்லப்படுகிறது. அந்த 4 மாநிலங்களில், 3 மாநிலங்கள் பி.ஜே.பி கட்சியின் தலைமையில் செயல்படுகின்றன.

குடிமக்கள் வாழும் உள்ளூர் வட்டங்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், ‘ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக முன்னேற்றம் காணப்படுகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் பீகாரில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. மற்ற மாநிலங்களில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன’ என அதில் சொல்லப்பட்டுள்ளது.

உள்ளூர் வட்டங்களின் தலைமை அதிகாரியான கே.யதீஷ் ராஜாவட், ‘‘நடந்த கணக்கெடுப்பில் நகராட்சிகளின் செயல்பாடுகள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. மேலும், கவனம் செலுத்த வேண்டும் என்றும், இன்னும் முழுமையான செயல்பாட்டில் ஈடுபட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். 

நடத்தப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட ஆய்வில், கடந்த 2 ஆண்டுகளில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் 71 சதவிகித மக்களுக்கு நகராட்சிப் பணியாளர்களின் தொலைபேசி எண்கள்கூடத் தெரியவில்லை. தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் அழியாத பொருட்கள் அடைந்துகிடப்பதாக 87 சதவிகித மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மோசமான சுகாதார முயற்சிகள் ஏற்பட்டுள்ளதாக ‘இந்தியா ஸ்பெண்ட்’ என்ற தரவு நாளித வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு விவரங்களில், 23 சதவிகித குடும்பத்தினர் கழிப்பறையை உபயோகிப்பதாகவும், அதில், கடந்த 15 ஆண்டுகளில் 2 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 5 மாநிலங்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு துப்புரவு பிரசாரம் நடத்தியது. இந்தியாவின் 1.2 பில்லியன் மக்கள்தொகையில், 37 சதவிகிதத்தினர் இந்த 5 மாநிலங்களில்தான் உள்ளனர். மக்கள் முன்னேற்றம் அடையாமல் இங்கு வெற்றி காண்பது கடினம்.



‘பிரதமர் தொகுதியான வாரணாசியில் கழிப்பறை அமைக்க இன்னும் 32 ஆண்டுகள் ஆகலாம்’ என உள்ளூர் வட்டாரங்கள் நடத்திய ஆய்வில் சொல்லப்படுகிறது. அதேபோல, ‘உள்துறை அமைச்சர் தொகுதியான லக்னோவில் 35 ஆண்டுகளும், சுஷ்மா சுவராஜ் தொகுதியில் 8 வருடங்களும், விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங் அவருடைய இலக்கை அடைய 74 ஆண்டுகளும், போக்குவரத்துக் கழக அமைச்சர் நிதின் கட்காரி 2 ஆண்டுகளும் எடுத்துக்கொள்வார்கள்’ என ஆய்வில் சொல்லப்பட்டு உள்ளது.

திட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில், வெறும் 4 மாநிலங்களில்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘இந்தத் திட்டத்தை 2019-ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும்’ என பிரதமர் எடுத்த முயற்சி வெற்றி அடைய வேண்டுமெனில், நகராட்சியும், மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். தூய்மையான இந்தியாவாக மாற்ற வேண்டும் என்றால் தனி மனிதனும் இதில் பங்கெடுத்துச் செயல்பட வேண்டும். மாற்றம் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்.

இரண்டு வருடங்கள் ஆன சுவச் பாரத் திட்டம்

 

 - நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ