Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்... கேரளாவில் 6 பேர் கைது 

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவிற்குள் உள்நாட்டுக் குழப்பங்களை உண்டுபண்ணும் நோக்கில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளன. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முயற்சியை முறியடித்து, தீவிரவாதிகள் ஆறு பேரை கேரளாவில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவியிருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பான ஐ.பி. மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.விற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் டெல்லி காவல்துறையுடன் இணைந்து தேசிய புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்ட சிலரை தீவிரமாகக் கண்காணித்துள்ளனர். இதனையடுத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர், கேரளாவில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர்‌ என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கேரளா திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்கிற யூசுப் உட்பட மேலும் ஒருவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வரும் நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்போன், 'லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது கொண்ட ஈர்ப்பால், அந்த அமைப்புக்காக வேலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து 3 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுபஹானி கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே தமிழகத்திலும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் தீவிரவாதிகள் தங்கி இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கொட்டிவாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

- ரா.வளன் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close