Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் 'சர்ஜிக்கல் அட்டாக்'குக்கு உதவிய உளவாளி இவர்தான்..!

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைச் சீண்டி வருவதால், எல்லைப் பாதுகாப்பைப் பலமடங்கு கூட்டி, ‘எதற்கும் நாங்கள் தயார்’ என இந்தியா நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது. இந்த நவீனயுகத்தில் எல்லைப் பாதுகாப்புக்குத் துப்பாக்கிகள் மட்டும் போதாது என்பதை இந்தியா உணராமல் இல்லை. இதன் விளைவு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களைக் கண்காணிக்கவும், எல்லைப் பாதுகாப்புக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 6 செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளது.

‘Cartosat 2 C’ செயற்கைக்கோள்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களைத் துல்லியமாக அழித்து கெத்தாக இந்தியா திரும்பினர். தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவத்தினர் துல்லியமாக அழிக்க, ‘Cartosat 2 C’ என்ற செயற்கைக்கோள் உளவாளியாக இருந்து உதவியுள்ளது.   Cartosat 2 C செயற்கைக்கோளை, ஜூன் 22-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் இருந்து விண்ணில் ஏவியது இஸ்ரோ.

90 நிமிடங்கள் பூமியைச் சுற்றிவரும் இந்தச் செயற்கைக்கோளால், 0.65 மீட்டரில் தெளிவான படங்களை உருவாக்க முடியும். Cartosat 2 C போன்ற ஒரு செயற்கைக்கோள் பாகிஸ்தானிடம் இல்லை. சீனாவிடம் இதுபோன்ற ஒரு செயற்கைக்கோள் இருந்தாலும், Cartosat 2 C எடுப்பதுபோல தெளிவான படங்களை எடுக்க முடியாது. Cartosat 2 C செயற்கைக்கோளால் ஒரு நிமிட வீடியோவும் எடுக்க முடியும். ஒரு விநாடிக்கு 37 கி.மீ. வேகத்தில் இந்தச் செயற்கைக்கோள் பயணித்தபோதிலும், ஒரு நிமிடத்தில் ஓர் ஒற்றைப் புள்ளியில் கவனம் செலுத்தி வீடியோ எடுக்கும் திறன்கொண்டது. இந்த உளவாளி செயற்கைக்கோள், ஒரு வீட்டில் உள்ள கார்களின் எண்ணிக்கையையும், முக்கிய இடங்களையும் தெளிவாகக் காட்டி கொடுத்துவிடும்.

GSAT-6 செயற்கைக்கோள்!

‘சர்ஜிக்கல் அட்டாக்’ என்பது குறைந்த சேதம் மற்றும் அப்பாவிகள் பாதிக்காத அளவுக்குத் துல்லியமாக இலக்கை மட்டும் தாக்குவதாகும். அதற்கு, விரிவான புலனாய்வையும் துல்லியமான தகவல்களையும் Cartosat 2 C செயற்கைக்கோள் தந்து உதவியுள்ளது. Cartosat 2 C செயற்கைக்கோள் தவிர, 2,000 கிலோ எடைகொண்ட GSAT-6 என்ற செயற்கைக்கோளும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது. GSAT-6 இரண்டு திசைகளிலும் வீடியோ எடுக்கும் திறன்கொண்டது. GSAT-6 பாதுகாப்புக் கண்காணிப்பு, தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஆகியவற்றுக்காகக் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. ராணுவ வீரர் ஒருவரின் தலைக்கவசத்தில் ஒரு கேமராவைப் பொருத்தி, அந்த கேமராவை GSAT-6 உடன் இணைப்பதன் மூலம் சின்னச்சின்ன தகவல்களைச் சுலபமாகப் பெற்றுச் சேமித்துவைக்க முடியும். போரின்போது GSAT-6 சேமித்துவைத்துள்ள தகவல்கள் மூலம் ராணுவ வீரர்கள் விரைவாகப் பாதைகளைக் கண்டுபிடிக்கலாம். ஒசாமா பின்லேடனை கண்காணித்துப் பிடித்த ஆபரேஷனில், இந்தத் தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

‘‘இஸ்ரோ நம் நாட்டின் எல்லைகளையும், இந்திய மக்களையும் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது. இஸ்ரோவில் பணியாற்றிவரும் 17,000 பணியாளர்கள், நாட்டுக்காகப் புதிய புதிய செயற்கைக்கோள்களைக் கண்டுபிடித்து வருகின்றனர்’’ என இஸ்ரோ நிர்வாகம் பெருமையுடன் தெரிவித்திருக்கிறது.

- ஆ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ