Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களை ரகசியமாக எரித்த லஸ்கர்! #SurgicalStrike

காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடந்தியது. ஆனால், 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ' நடக்கவே இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. தற்போது இந்தியா நடத்திய 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்த இரவில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். லீபா, அத்முஹாம், தத்னியால் ஆகிய 3 இடங்கள்தான் அவை. பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய எல்லையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவுக்குள் இந்த பகுதிகள் இருக்கின்றன. இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 38 முதல் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அத்துடன் தீவிரவாதிகளின் முகாம்களும் , அவர்கள் தங்கியிருந்த கட்டடங்களும் தகர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். தீவிரவாதிகள் முகாம் இருந்த இடத்தின் அருகே வசிக்கும் கிராமவாசிகள் அன்றைய தினம் இரவு முழுக்க துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தாக தெரிவித்திருக்கின்றனர்.

எல்லையைத் தாண்டி 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தத்னியால் கிராமத்தைச் சேர்ந்த இருவர் இந்த தாக்குதலை நேரடியாக கண்டுள்ளனர். சல்லானா என்ற இடத்தில் நீலம் நதியையொட்டி லஸ்கர் இயக்கத்தின் பெரிய முகாம் உள்ளது. அதிகாலை நேரத்தில் கொல்லப்பட்ட சில தீவிரவாதிகளின் உடல்களை ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு அந்த பகுதிக்கு கொண்டு சென்றதையும் கண்டுள்ளனர். பின்னர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டவர்களின் உடல்களை ரகசியமாக எரித்துள்ளனர்.

அடுத்த நாள் அதாவது வெள்ளிக்கிழமை மதிய வேளையில், லஸ்கர் இயக்கத்தினர்  தொழுகை நடத்தும் மசூதியில் வழக்கத்துக்கு மாறாக ஏராளமானோர் கூடியுள்ளனர். அப்போது, 'கொல்லப்பட்டவர்களுக்காக பழிவாங்குவோம் ' என சபதம் எடுத்துள்ளனர். மேலும் 'பாகிஸ்தான் தங்களை பாதுகாக்கத் தவறி விட்டதாகவும்' புலம்பியுள்ளனர். 'நாம் நடத்தும் பதில் தாக்குதலை இந்தியா மறக்கக் கூடாது' என கோஷமிட்டதாகவும் நேரில் கண்டவர் ஒருவர் கூறியுள்ளார்.

காஷ்மீரிலும் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உறவினர்கள் கொண்டவர்கள் ஏராளமானோர் உண்டு. பிரபல ஆங்கிலப்பத்திரிகை பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் உறவினர்கள் வழியாக இந்தத் தகவல்களை உறுதி செய்து வெளியிட்டுள்ளது. அதே வேளையில் இந்திய ராணுவ வீரர்கள் யாரையும் நேரில் பார்க்கவில்லை. ஆனால், தீத்வால் என்ற கிராமத்தில் அடுத்த நாள் காலையில் லஸ்கர் இயக்கத்தினர் கூடியதையும், கொல்லப்பட்டத் தீவிரவாதிகளின் உடல்களை ட்ரக்கில் அள்ளிச் சென்றதையும் நேரில் கண்டதாக இன்னொருவர் கூறியுள்ளார்.

கைரதி பாக் என்ற இடத்தில் லஸ்கர்  இயக்கத்துக்குச் சொந்தமான 3 மாடிக் கட்டடத்தை இந்திய வீரர்கள் தரை மட்டமாக்கியுள்ளனர். கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இந்த பகுதிதான் லஸ்கர் இயக்கத்தின் முக்கிய இயங்குதளமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் நடந்த தாக்குதலில் 4  தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தினர் தர்க்குவதை அறிந்ததும் ஏராளமானத் தீவிரவாதிகள் காட்டுக்குள் ஓடி மறைந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீலம் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை நிலைமையை நேரில் கண்ட ஒருவர் கூறுகையில், 'தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். காயமும் அடைந்துள்ளனர். ஆனால், கொல்லப்பட்டவர்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல் வேறு இடத்திற்கு கொண்டு போய் எரித்துள்ளனர்' என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' நடக்கவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்ததால், இந்திய ராணுவம் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடத் தயாராக உள்ளது. இந்திய ராணுவத்திடம் இருக்கும் 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' வீடியோ காட்சிகள் 90 நிமிடங்கள் ஓடக் கூடியது என்றும் கூறப்படுகிறது. ஆனால், வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டால், பாகிஸ்தான் - இந்தியா இடையே டென்ஷன் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால். மத்திய அரசு தீவிர ஆலோசனைக்கு பிறகே இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும்.  இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்திய ராணுவத்தினர் நடத்தியத் தாக்குதல் நடத்தியது உண்மை. அத்தனைக்கும் ஆதாரங்கள் உள்ளன. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்'' என்றார்.

-எம். குமரேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close