Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இருநாட்டு மீனவர்கள் பிரச்னையை தீர்க்க இதுதான் வழி..! டெல்லியில் ரணில் பேட்டி

இந்திய மீனவர்கள் எல்லையைத் தாண்டுவதால் கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இருநாட்டு மீனவர்கள் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றார். 

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வருவதால் அவர்களை கைது செய்வதாக இலங்கை கடற்படையினர் கூறிவருகின்றனர். ஆனால், தமிழக மீனவர்களோ, நமது நாட்டின் எல்லையில் மீன்பிடித்தாலும் இலங்கை கடற்படையினர் கைது செய்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை இன்று ரணில் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, "இருநாட்டு மீனவர்கள் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். இந்திய மீனவர்கள் எல்லையைத் தாண்டுவதால் கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எல்லைத் தாண்டுவதால் இருமாநில மக்களிடையே விரும்பத்தகாத பிரச்னைகள் ஏற்படுகிறது. பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நவம்பரில் நடக்கும். இலங்கை- இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மீனவர்கள் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைப்பாளர்கள்.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகள் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. இந்தியா- இலங்கை உறவு வலுவாக உள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம். இலங்கையின் உள்கட்டமைப்பைப் மேம்படுத்த இந்தியா தொடர்ந்து உதவுகிறது. சீனாவுடனான இலங்கையின் உறவு பொருளாதார ரீதியிலானது. ராணுவ ரீதியிலானது அல்ல. எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னையை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க வேண்டும். வடக்கு  மாகாணத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்" என்றார் ரணில்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ