Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்ச்சை நாயகன் சசி தரூர் எழுப்பியுள்ள புதிய சர்ச்சை...!

சர்ச்சைக்கும் சசி தரூருக்கும் எப்போதுமே  நெருங்கிய தொடர்பு உண்டு. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக சசிதரூர் இருந்தபோதுதான், அவரது மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லியில் நட்சத்திர ஹோட்டலில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதியப்பட்டது. ஆனால், உடற்கூறு பரிசோதனை மீண்டும் நடத்தப்பட்டு, தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளது. 

ஐ.நா.-வில் இந்தியப் பிரதிநிதியாக இருந்தது முதல் மாடல் அழகி சுனந்தா புஷ்கரை  திருமணம் செய்தது, சுனந்தாவின் மர்மமான மரணம் குறித்த சர்ச்சை  இன்று வரை நீடிப்பது என, சசி தரூர் என்றாலே சர்ச்சையின் முழு உருவம் தான்.

"பொதுவாக அரசியல் தலைவர்கள் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவார்கள்.  ஆனால் பாலியல் தொடர்பாக மட்டும் பேசுவதே கிடையாது. மாற்றத்தை விரும்பினால், இதுபோன்ற நிலையும் மாற வேண்டும் என்று " கூறி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சசி தரூர். 

பாலியல் சம்பவங்கள் நகரங்களில் மட்டுமே நடைபெறுவதாகவும், கிராமங்களில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்பது போலவும் சித்தரிக்கப்படுகிறது. மிக மோசமான சம்பவங்கள், கிராமப்புறங்களிலேயே நடந்துள்ளது என்பது சசி தரூரின் கருத்து. வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்தார் என்ற காரணத்துக்காக உள்ளூர் பெரியவர்கள் ஒன்றுகூடி, 12 பேர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார். பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் அளித்த போதிலும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.

"பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்படும் பெண்களின் உடை அணிதல், ஆண் நண்பருடன் இரவு நேரத்தில் தனியாகச் செல்லுதல் போன்ற அச்சம்பவத்திற்கான காரணங்களைக் குறிப்பிட்டு குறைகூறும் சில அரசியல்வாதிகள், குற்றச்செயலில் ஈடுபடும் நபர்  குறித்து கருத்து தெரிவிப்பதில்லை" என்றும், நவீனயுகத்தில் பெண்கள் எந்தநேரத்திலும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி எங்குவேண்டுமானாலும் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கான சூழலை உருவாக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை” என்று அவர் வாதிடுகிறார். 

"தவிர, ஆண்கள் தவறு செய்யக்கூடியவர்கள் என்ற நிலையை மாற்றி, இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனை அதாவது மரண தண்டனை விதிக்கக்கூடிய வகையில் சட்டமும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதுபோன்று சட்டம் ஆதரிக்குமானால், ஆண்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். பாலியல்ரீதியான சம்பவங்கள் ஏற்படும் ஒருசில தருணங்களில். கண்டிக்கத்தவறும் அரசியல்வாதிகளையும் நாம் பார்க்கிறோம்" என்று கொதிக்கிறார் சசிதரூர். 

அரசியல்வாதிகள் பார்வையில் பாலியல் சம்பவம் சமூகம் சார்ந்த பிரச்னையாகவே கருதப்படவேண்டும். சிலர், தங்களும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று பெயரளவுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதும் உண்டு. பாலியல்துன்புறுத்தலும் ஒரு வன்முறை என்பதை உணர்தல் வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சர்ச்சை சசி தரூர் தெரிவிப்பது போன்று, இந்தியாவில் மகளிர் எந்தநேரத்திலும் பாதுகாப்பாக சென்று வரக்கூடிய நாள் விரைவில் ஏற்பட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.

- சி.வெங்கட சேது

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ