Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெற்றோர்களை விட்டு வர சொன்னால் மனைவியை விவாகரத்து செய்து கொள்ளலாம்: உச்சநீதி மன்றம்

குறட்டை விட்டதற்காக விவாகரத்து, தன் வாட்ஸ்அப் பதிவுக்கு பதிலளிக்கவில்லை என்பதற்காக விவாகரத்து என்று பல வித்தியாசமான விவாகரத்துகள் நீதிமன்றங்களை நாடி வந்துள்ளன. அந்த வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த நரேந்திரா என்பவர் தன் மனைவி பெற்றோர்களை விட்டு வர கூறி வற்புறுத்தியதால், விவாகரத்து வேண்டும் என்று தொடுத்த வழக்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கடந்த ஆறாம் தேதி நீதி அரசர்கள் அனில் டேவ் மற்றும் நாகேஸ்வர ராவ் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 1992-ம் ஆண்டு திருமணம் ஆன தன் மனைவி மீனா தன் பெற்றோர்களிடமிருந்து தன்னை பிரிக்க நினைப்பதால் விவாகரத்து வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார் நரேந்திரா.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வயதான பெற்றோர்களை விட்டு வர வேண்டும் என்று மனைவி வற்புறுத்தினால், மகன்கள் "கொடுமை" என்ற அடிப்படையில் விவாகரத்து கோரலாம் என்று கூறினார். வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் மகன்களுக்கு உள்ளது என்று சுட்டிக் காட்டினர் நீதிபதிகள். திருமணத்துக்குப் பின் மனைவி கணவனின் குடும்பத்தில் ஒருவர் ஆகிறார் என்றும் கணவனின் வருமானத்தை முழுமையாக அனுபவிக்க மனைவிகள் நினைப்பது தவறு என்றும் அவர்கள் கூறினர்.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியது,

"சமூகத்தின் பழக்க வழக்கங்களை மாற்றி தனியாக வாழ வேண்டும் என்று பெண் நினைத்தால் அதற்கு முறையான காரணம் இருக்க வேண்டும். பொதுவாக மகன்கள் யாரும் தனியாக வாழ விறுப்பப்பட மாட்டார்கள். அவரின் வருமானத்தை நம்பிதான் அவரின் பெற்றோர்களும் பிற குடும்ப உறுப்பினர்களும் வாழ்கிறார்கள். தனியாக வாழ முடியவில்லை என்பதற்காக மனைவி தற்கொலை மிரட்டல் விடுத்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ கணவனின் மன அமைதியையும் சமூக மரியாதையையும் அது கெடுத்து விடும். அதனால் ஏற்படும் சட்ட சிக்கல்களை நினைத்து பார்ப்பதே கடினம். எனவே இதுபோன்ற நடவடிக்கைகள் மனைவி கணவனுக்கு இழைக்கும் "கொடுமை" என்று கருதப்படும்."

- ம. சக்கர ராஜன்,

எடிட்டர் சாய்ஸ்

MUST READ